/tamil-ie/media/media_files/uploads/2019/10/Alya-Manasa.jpg)
Alya Manasa
Vijay TV Alya Manasa: விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’ராஜா ராணி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்திருந்தனர்.
சீரியலில் நடிக்கும் போது ஆல்யா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டனர். அதற்குக் காரணம் ஆல்யா வீட்டில் எழுந்த எதிர்ப்பு தான். திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நண்பர்களும், உறவினர்களும், திரையுலக நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் ஆல்யா மானஸா கர்ப்பமாக இருந்தார்.
,
சமீபத்தில் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, மகளுக்கு அய்லா சையத் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதோடு குழந்தையுடன் இருக்கும் படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், மகளுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் ஆல்யா. இந்த வீடியோ 4.20 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்று வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.