scorecardresearch

தல அஜித்தின் வெறித்தன ரசிகை: டிடி வெளியிட்ட வீடியோ

இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித்தை அவரது ரசிகர்கள் தல அஜித் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர்.

vijay tv anchor dd shares wishes video ajith birthday, vijay tv fame dd, dd dhivyadarshini, அஜித், அஜித் பிறந்தநாள், டிடி, திவ்யதர்ஷினி, விஜய் டிவி பிரபலம் டிடி, வைரல் வீடியோ, ajith birthday, viral video, tamil cinema news, latest tamil cinema news, ajith birthday wishes video
vijay tv anchor dd shares wishes video ajith birthday, vijay tv fame dd, dd dhivyadarshini, அஜித், அஜித் பிறந்தநாள், டிடி, திவ்யதர்ஷினி, விஜய் டிவி பிரபலம் டிடி, வைரல் வீடியோ, ajith birthday, viral video, tamil cinema news, latest tamil cinema news, ajith birthday wishes video

நடிகர் அஜித் தனது 49-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிரபல டிவி தொகுப்பாளினி டிடி அவருக்கு, பிறந்தநாள் தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாருக்கு நாளை மே 1-ம் தேதி 49 வது பிறந்தநாள். சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கும் ரசிகர் மன்றம் என்கிற பெயரால் இளைஞர்களின் சக்தியை வீணாக்க கூடாது என்பதற்காக ரசிகர் மன்றங்களையே களைத்துவிட்டார். ஆனாலும், அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 1990-ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதையடுத்து, 1993-ம் ஆண்டு அமராவதி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித்தை அவரது ரசிகர்கள் தல அஜித் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர்.

இயக்குனர் ஹெச்.வி்னோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் மற்ற எல்லா படங்களையும் போலவே தள்ளிப்போகிறது.

இந்த நிலையில்தான் அஜித் ரசிகர்கள் நாளை அவருடைய பிறந்த நாளை ஃபேஸ் புக், டுவிட்டரில் கொண்டாட தயாராகிவருகின்றனர்.


அஜித் பிறந்தாளையொட்டி, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி அஜித்துக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தல அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகையா என்று வியந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv anchor dd shares ajith birthday wishes video goes viral