ஒரு காலத்தில் விஜய் டிவியில் ரம்யா இல்லாத நிகழ்ச்சியே இல்லை! இப்போது என்ன ஆச்சி அவருக்கு?

அது எப்படி பிறந்த வீட்டை மறக்க முடியுமா?

அது எப்படி பிறந்த வீட்டை மறக்க முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay tv anchor ramya

tamil tv news, vijay tv anchor ramya

vijay tv anchor ramya : சின்னதிரையில் விஜய் டிவி ரம்யா பற்றி அறிமுகவே தேவைப்படாது. இவர் இல்லாத நிகழ்ச்சிகளே பார்க்க முடியாது. விருது நிகழ்ச்சிகள் தொடங்கி இசை வெளியீடு, சிறப்பு நிகழ்ச்சிகள், கேம் ஷோ என அனைத்திலும் ரம்யா முகம் தான். நடிகர்கள், நடிகைகள் எல்லாருக்கும் ரம்யா என்றால் அவ்வளவு நெருக்கம்.

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகள் வெற்றி பெற்றதற்கு ரம்யாவும் ஒருகாரணம் என்றால் அது மிகையல்ல. அவரின் ட்ரெஸிங் ஸ்டைல், மேக்கப்,பேச்சு திறன் எளிமையாக எல்லோருக்கும் பிடித்து போய்விடும்.

publive-image

இப்படி ஹாப்பியாக சென்றுக் கொண்டிருந்த ரம்யாவின் வாழ்க்கையில் அவரின் திருமணம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருந்தது. குறிப்பாக அவரின் விவகாரத்து குறித்து நிறைய விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் பறந்தன. ஆனால் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் தனது பணியை தொடர்ந்தார் ரம்யா. தீடீரென்று ரம்யாவின் முகம் விஜய் டிவியில் காணாமல்போனது. அவர் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சிகளிலும் வேறு ஆங்கர்கள் வர தொடங்கினர்.

Advertisment
Advertisements

publive-image

முழுமையாக சின்னத்திரை விட்டு ஒதுங்கி விட்டாரா ரம்யா என்ற கேள்வி எழுந்த போது பளு தூக்குதல், யோகா என புகைப்படங்களை வெளியிட்டு கலக்கினார். அதனைத்தொடர்ந்து பெரிய திரையிலும் ரம்யாவின் வரவு அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. சமீபத்தில் வெளியான ஆடை படத்திலும் நடிப்பில் வெளுத்து வாங்கி இருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலங்கள் பலர் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை தங்களது கடின உழைப்பால் பெறுகின்றனர். இது போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விஜய் டிவி பெரும் சாதனை படைத்து வருகிறது.

publive-image

அவ்வளவு தானா ரம்யா? இனிமே ஆங்கரிங், டிவி ஷோ எல்லாம் பண்ண மாட்டீங்களான்னு கேட்டா, அதற்கு அவர் தரும் பதில் இதுதான் “அது எப்படி பிறந்த வீட்டை மறக்க முடியுமா? தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் வருவேன்” என்கிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: