விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்த விஜே ரம்யா தான் சங்கத்தலைவன் திரைப்படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு விஜே ரம்யாவின் தோற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vj-ramya1-300x300.jpg)
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே ரம்யா. அதன் பிறகு, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே.ரம்யா உடற்பயிற்சியிலும் ஃபிட்னஸ்ஸிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அதோடு, விஜே ரம்யா பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். தனது ஃபிட்னஸ் ஆர்வம் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், உடற்பயிற்சி மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான டிப்ஸ்களை தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் ரசிகர்களுடனும் பகிர்ந்துகொண்டுவருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vj-ramya2-300x300.jpg)
விஜே ரம்யா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், சினிமாவிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். அமலா பால் நடித்த ஆடை திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா, விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனனின் தோழியாக நடித்து கவனத்தைப் பெற்றார். அதுமட்டுமில்லாமல், விஜே ரம்யா தொடர்ந்து, சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vj-ramya3-240x300.jpg)
சின்னத்திரையில் இருந்து முன்னேறி சினிமாவுக்குள் நுழைந்த விஜே ரம்யா, தான் சங்கத்தலைவன் படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் விஜே ரம்யா ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது தோற்றம் க்யூட்டாக இருக்கிறது என்று பாராட்டுதல்களையும் கம்மெண்ட்ஸ்களைத் தெரிவித்து வருகின்றனர்.
விஜே ரம்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தனது புகைப்படம் குறித்து குறிப்பிடுகையில், “சங்கத் தலைவன், திரையுலகில் எனக்கு முதல் திரைப்படமாக அமைந்த படம். வரும் வெள்ளிக்கிழமை வெளிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/vj-ramya4-1-261x300.jpg)
சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சங்கத்தலைவன் திரைப்படத்தை உதயம் NH4 படத்தை இயக்கிய இயக்குநர் மணிமாறன் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, வி.ஜே.ரம்யா, கருணாஸ், சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சங்கத்தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"