விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய தொடர்... அந்த நேரத்துக்கு புது சீரியல் ரெடி!

விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வந்த நிலையில், அந்த வரிசையில் இன்னொரு சீரியலும் கிளைமேக்ஸை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வந்த நிலையில், அந்த வரிசையில் இன்னொரு சீரியலும் கிளைமேக்ஸை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
vijay tv soon end serial

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய தொடர்

விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் முடிவுக்கு வந்த நிலையில், அந்த வரிசையில் கண்ணே கலைமானே சீரியலும் கிளைமேக்ஸை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதில் புதிய சீரியலும் தயாராக இருக்கிறது.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களின் பிரதான நிகழ்ச்சியாக சீரியல்களே இடம்பிடித்துள்ளன. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி, ஜெயா டிவி என எல்லா சேனல்களும் டி.ஆர்.பி-யில் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. 

விஜய் டிவி சளைக்காமல் புதுப்புது சீரியல்களைத் தொடங்கியும் பழைய சீரியல்களையும் முடித்தும் வருகிறது. அந்த வகையில், அண்மையில், பாண்டியன் ஸ்டோர்ஸ்,  காற்றுக்கென்ன வேலி என 2 முக்கிய தொடர்கள் முடிவுக்கு வந்தன. 

இதைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு தள புகைப்படங்களும் வெளியானது.

Advertisment
Advertisements

இந்நிலையில், விஜய் விடியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு முக்கிய சீரியலான கண்ணே கலைமானே சீரியலும் கிளைமேக்ஸை எட்டியுள்ளதாகவும் விரைவில் இந்த சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கண்ணே கலைமானே சீரியலுக்கு பதிலாக புதியதாக தொடங்கப்படும் சக்திவேல் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: