/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-15.jpg)
vijay tv aranmanai kili
vijay tv aranmanai kili : உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் துணை அதன் நடித்துள்ள இவர், இதுவரை பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுகு சீரியளில் தான்.அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுகு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார். இதுவரை 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நீலிமா நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியளில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு அழகான பின் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் தனது மகளுடன் குழந்தையும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நீலிமா.
தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நிலைத்து இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல அதுமட்டுமில்லை எந்த ரோலில் நடித்தாலும் அதற்கான முழு உழைப்பை போடும் திறமை கொண்டவர் நீலிமா. இப்போது பிஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் அரன்மனை கிளி சீரியலில் வில்லி ரோலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் நீலிமா.
நீலிமா பற்றி அவரின் நெருக்கமானவர்கள் அதிகம் பகிரும் தகவல் இது தான். குழந்தை பிறந்து அடுத்த ஒரே மாதத்துல மறுபடியும் ஷூட்டிங் கிளம்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நடிகை. பல மாதங்கள் குழந்தையை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிப்போய் இருக்கிறார். அங்கேயே தாய்ப்பால் கொடுத்து, குழந்தையைப் பராமரித்துள்ளார்.
தமிழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் தனது நடிப்பினால், பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டவர் நீலிமா ராணி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.