விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மணைக்கிளி சீரியல் நடிகை தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் புதிய தொற்று நோய் உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி முடக்கி வைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வழிக்காட்டுதல்களை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே வரவேற்பை பெற்ற ஒன்று. இந்த சீரியலில் நடித்துவரும் நடிகை மோனிஷா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.