Advertisment
Presenting Partner
Desktop GIF

விருதுகளை அள்ளிய குக் வித் கோமாளி: யார் யாருக்கு அவார்டுனு பாருங்க!

விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழாவில், ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர் அதிக விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர். விஜய் டிவி விருதுகளை யார் பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
vijay tv awards, vijay tv award, cooku with comali team maximum award winning, விஜய் டிவி விருதுகள், குக்கு வித் கோமாளி, புகழ், ஷிவாங்கி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, pugazh, shivangi, raja rani 2, alya manasa, bharathi kannamma, cooku with comali

விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழாவில், ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர் அதிக விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர். விஜய் டிவி விருதுகளை யார் பெறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

Advertisment

விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழா ஏப்ரல் 11ம் தேதி பிற்பகல் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி விருதுகள் 30 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி கலர்ஃபுல்லான டான்ஸ், இசை, நடிப்பு, நகைச்சுவை ஆகிய உணர்சிகரமான நிகழ்ச்சிகளுடன் 6 மணி நேரம் நடைபெறுகிறது. விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியை டிடியும் ம.க.ப ஆனந்த்தும் தொகுத்து வழங்குகிறார்கள்.

விஜய் டிவி விருதுகள், சிறந்த ஹீரோ, சிறந்த ஹீரோயின், சிறந்த தாய் நடிகை, சிறந்த தந்தை நடிகர், சிறந்த மாமியார், சிறந்த மருமகள் நடிகை, சிறந்த மகன் நடிகர், சிறந்த மகள் நடிகை, சிறந்த சீரியல், பிடித்த குடும்பம், சிறந்த துணை நடிகர் ஆண், சிறந்த துணை நடிகர் பெண், சிறந்த நகைச்சுவை சீரியல், சிறந்த வில்லன் நடிகர், திரையில் பிடித்த ஜோடி உள்ளிட்ட 30 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் டிவி விருது வழங்கும் விழாவில், விஜய் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர் அதிக விருதுகளை அள்ளிக் குவித்துள்ளனர். புகழ், ஷிவாங்கி போன்றவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு விஜய் டிவி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி விருதுகள் யார் யாருக்கு எந்தெந்த பிரிவுகளில் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

  • சிறந்த மருமகள்- ஆல்யா மானசா (ராஜா ராணி 2)
  • சிறந்த அப்பா- மனோஹர்
  • சிறந்த வில்லி- பரீனா (பாரதி கண்ணம்மா)
  • சிறந்த துணை நடிகை- ஹேமா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
  • சிறந்த இயக்குனர்- பிரவீன் பென்னட் (பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2)
  • Trending Pair- ஷிவாங்கி, அஷ்வின்
  • சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிவாஷினி (செந்தூரப் பூவே)
  • பேவரெட் நிகழ்ச்சி- குக் வித் கோமாளி 2
  • சிறந்த அம்மா- சுசித்ரா (பாக்கியலட்சுமி)
  • சிறந்த காமெடியன்- புகழ்
  • சிறந்த நாயகி- ரோஷினி (பாரதி கண்ணம்மா)
  • Find Of The Year (Male)- சித்து (ராஜா ராணி 2) ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivangi And Pugazhi Cooku With Comali Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment