/tamil-ie/media/media_files/uploads/2019/12/Ayutha-Ezhuthu-serial.jpg)
Ayutha Ezhuthu serial
Ayudha Ezhuthu : விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில், அடாவடி காளியம்மாவின் மகனை சப் கலெக்டர் இந்திரா திருமணம் செய்துக் கொள்கிறாள். தன் எதிரி, காளியம்மாவின் மகன் தான் சக்தி என்று அப்போது அவளுக்குத் தெரியாது. அவன் படிக்காதவன் என்றும் தெரியாது. இந்திராவை பழிவாங்க காளியம்மாவுக்கு இது சாதகமாக அமைகிறது.
இந்திராவுக்கு பக்க பலமாக இருந்த சக்தியின் அப்பாவும், கல்யாணம் முடிந்த பிறகு காணாமல் போகிறார். இது தான் சாக்கென்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் இந்திராவை பழி வாங்குகிறார் காளியம்மா. என்ன தான் படித்து கலெக்டராக பணியாற்றினாலும், மாமியார் என்ற காரணத்தினால், காளியம்மா செய்வதை எல்லாம் முடிந்தளவு பொறுத்துக் கொள்கிறாள் இந்திரா. மாமியாருக்கு பயந்து பெண்கள் அனைவரும் அடங்கிப் போக தேவையில்லை. தப்பு என்றால் அதை சொல்வதில் தப்பில்லை. நியாயத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் கதை நகர்கிறது.
காளியம்மா, இந்திரா கையில் சூடு வைக்கிறார். பாலில் விஷம் கலந்துட்டதாக அவள் மீது பழி போடுகிறார். நான் பாலில் விஷம் கலக்கவில்லை என்றதும், அதை நிரூபிக்க, பால் குடம் எடுக்க சொல்கிறார். இப்படி நிஜத்தில் கொடுமை செய்யும் சில மாமியார்களுக்கு ‘கண்டெண்ட்’ கொடுத்துக் கொண்டிருக்கிறார் காளியம்மா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.