Ayudha ezhuthu Sharanya : சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சீரியல் நடிகைகளும் வித விதமான ஃபோட்டோஷூட்களை நடத்தி, அந்த படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அதுவும் இந்த லாக்டவுன் கால கட்டத்தில் ஃபோட்டோக்கள் மூலம் ரசிகர்களுடன் தங்களது தொடர்பை நீட்டித்து வருகிறார்கள்.
இட்லி, தோசைக்கு இதை விட பெஸ்ட் சைடிஷ் இருக்குமா? வட கறி!
அந்த வகையில் தற்போது விஜய் டிவி, ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா தனது காதலருடன் கடலுக்கு அடியில் எடுத்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் சரண்யா. இதையடுத்து அவர் விஜய் டிவியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டர் இந்திராவாக நடித்து வருகிறார்.
அதோடு தனது காதலரான ராகுலுடன் இருக்கும் பல படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது சரண்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் கடலுக்கடியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவிலேயே கடலுக்கடியில் கப்பிளாக எடுத்த முதல் ஃபோட்டோ ஷூட் இது தானாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”