இனி வில்லத்தனம் தான்… பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் வீடியோ; ரசிகர்கள் உற்சாகம்

பாக்கியலட்சுமி சீரியலில் இனி அதிக வில்லத்தனம் செய்யப்போகிறேன்; கோபியாக நடிக்கும் சதீஷ் வீடியோ வெளியீடு

பாக்கியலட்சுமி சீரியலில் இனி அதிக வில்லத்தனம் செய்யப்போகிறேன்; கோபியாக நடிக்கும் சதீஷ் வீடியோ வெளியீடு

author-image
WebDesk
New Update
baakiyalakshmi sathish

பாக்கியலட்சுமி சீரியலில் இனி அதிக வில்லத்தனம் செய்யப்போகிறேன்; கோபியாக நடிக்கும் சதீஷ் வீடியோ வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாக்கியலட்சுமி சீரியலில் இனி காமெடி கேரக்டர் முடிவடைந்து வில்லத்தனம் செய்யும் கேரக்டராக மாறப்போகிறேன் என கோபியாக நடித்து வரும் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

சீரியலில் தற்போது பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு திருமணம் நடத்தி வைக்க பழனிசாமியின் அம்மாவும், அக்காவும் முயற்சி செய்தது கோபி மூலமாக பாக்யாவிற்கு தெரிய வருகிறது. இந்தநிலையில், இது குறித்து பழனிசாமியிடம் பாக்யா பேசி இருக்கிறார். பழனிச்சாமியும் பாக்யாவை காதலிப்பது போல் சுற்றி வருகிறார்.

இன்றைய எபிசோடில் ராதிகா ஆஸ்பிட்டலுக்கு செக்கப் போக வேண்டும் என்று கோபியிடம் சொல்ல, கோபி ரெஸ்டாரண்டுக்கு போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். அப்போது ராதிகா தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் வழியில் கீழே கிடந்த பூ ஜாடியை கவனிக்காமல் மிதித்து விட அதில் தவறி விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு இருக்கிறது. இப்படியாக எபிசோடு முடிவடைகிறது.

Advertisment
Advertisements

இருப்பினும் நாளைக்கான ப்ரோமோவில் ராதிகாவின் கர்ப்பம் கலைந்து விட்டது என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ராதிகா உங்க அம்மா தான் என்னை பிடித்து தள்ளிவிட்டார்கள் என்று சொல்கிறார். இதை நம்பி கோபியும் அம்மா ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இந்த நிலையில் சீரியலில் இனி என்ன நடக்கப் போகிறது என்று கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பாக்கியலட்சுமி சீரியலில் இனிதான் பல அதிரடியான திருப்பங்கள், த்ரில்லிங்கான விஷயங்கள் வரப்போகிறது. மனசுக்கு நெருடலான விஷயங்கள் நடக்கப் போகுது. ஆனால் அதை எல்லாம் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கோபியாக நடிப்பதை எல்லோரும் பாராட்டுகிறீர்கள். எனக்கு அது சந்தோசம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இனி காமெடியை விடவும் அதிகமாக வில்லத்தனம் தான் நான் செய்யப் போகிறேன். இன்னும் பெட்டரா வில்லனா, காமெடியனா நடிக்க முயற்சிக்கிறேன். இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவு தந்தது போலவே இனியும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.” இவ்வாறு அந்த வீடியோவில் சதீஷ் பேசி இருக்கிறார். இதற்கு அவரை பாராட்டி ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay Tv Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: