Advertisment

ஜீ தமிழுக்கு தாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை: வெயிட்டான வேடம்?

சின்னத்திரையில் கேளடி கண்மணி என்ற தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jeni

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ்

சின்னத்திரையின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக உள்ள பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவரின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாக்யாவின் மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

சின்னத்திரையில் கேளடி கண்மணி என்ற தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

இதனிடையே நடிகை திவ்யா கணேஷ் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் முதலில் நடிக்க நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வந்த நடிகை சரண்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்தாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க நடிகை திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இது குறித்து விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், ஜூலை 2-வது வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment