/indian-express-tamil/media/media_files/GYx6TPWIRr2Zay0sn4NB.jpg)
பாக்கியலட்சுமி சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்த முக்கிய நடிகர் மாற்றம்; புதுசா என்ட்ரி கொடுக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகர்; இனி தான் ஆட்டம் ஆரம்பம்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்து வந்த நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. சாதாரண இல்லத்தரசி சந்திக்கும் சவால்களை அடிப்படையாக வைத்து வெளியான சீரியலுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர். டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வரும் இந்த சீரியலில் பாக்யாவாக சுசித்ரா, ராதிகாவாக ரேஷ்மா, கோபியாக சதீஷ் நடித்து வருகின்றனர்.
சீரியலில் தற்போது, பாக்யா பொருள்காட்சியில் கேட்டரிங் தொடங்கினார். ஆனால் அவருக்கு அங்கும் பல பிரச்சனைகள் வந்தது. பாக்கியா கேட்டரிங் கெட்டுப்போன சாப்பாடு கொடுப்பதாக ஒருவர் கம்ப்ளைன்ட் செய்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து செக் பண்ணி பார்த்துவிட்டு அங்கு எந்த இடத்திலுமே கெட்டுப் போன சாப்பாட்டுக்கு அறிகுறி இல்லை. அதுபோல இங்கே எல்லாமே தரமான பொருட்கள் தான் பயன்படுத்துகிறார்கள் என்று சர்டிபிகேட் கொடுத்தனர்.
இப்படியாக பாக்கியாவுக்கு தனக்கு வந்த பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அதே நேரத்தில் செழியன் மற்றும் ஜெனி எப்படி சேரப் போகிறார்கள், செழியன் மீது தவறில்லை என்பதை பாக்யா எப்படி நிரூபிக்க போகிறார். அதுபோல எழில் வாழ்க்கையில் அமிர்தாவின் முதல் கணவரால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் அப்பாவாக நடித்திருந்த நடிகர் மன்மோகன் பல மாதங்களாகவே சீரியலில் காட்டப்படவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பது போன்றே கதை போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று அவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்த நடிகர் தாசரதி அறிமுகம் ஆகி இருக்கிறார். இதனால் இனி செழியன் வாழ்க்கையில் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.