scorecardresearch

ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்யா… கோபிய இப்படி புலம்ப விட்டுட்டீங்களே

காலணியில் தேர்தல் வருகிறது. இதில் பாக்யா போட்டியிட அவருக்கு போட்டியாக ராதிகாவை இறக்கி விடுகிறார் கோபி.

ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்யா… கோபிய இப்படி புலம்ப விட்டுட்டீங்களே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலணியில் நடந்த செயலாளர் தேர்தலில் பாக்யா ராதிகாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, தனது வீட்டுக்கு பக்கத்திலேயே ராதிகாவுடன் குடி வந்துள்ளார்.

தொடர்ந்து இனியாவை தன்பக்கம் இழுத்துக்கொண்ட கோபிக்கு நெருக்கடி கொடுக்க தாத்தாவும் அங்கு சென்று தங்கியுள்ளார். இதனிடையே காலணியில் தேர்தல் வருகிறது. இதில் பாக்யா போட்டியிட அவருக்கு போட்டியாக ராதிகாவை இறக்கி விடுகிறார் கோபி. மேலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராதிகா பாக்யாவை தாக்கும் விதமாக படிப்பை பற்றி பேசி பாக்யாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினார்.

இதையெல்லாம் கேட்டு பாக்யா அமைதியாக இருந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்றைய எபிசோட்டில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் 100-க்கு அதிகமான வாக்குகள் பெற்ற ராதிகாவை 1000-க்கு அதிகமான வாக்குகள் பெற்று பாக்யா தோற்றடித்துவிட்டார். அதன்பிறகு வெற்றி குறித்து மேடையில் பேசும் பாக்யா அனைவருக்கும் நன்றி கூறுகிறார்.

அதன்பிறகு பாக்யா பேசும்போது கோபியும் ராதிகாவும் கிளம்ப, தாத்தாவும் செல்வியும் அவர்களை தடுத்து நிறுத்தகின்றனர். அதன்பிறகு பேசும் பாக்யா அரசியல்வாதியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அனுபவமும் குடும்பத்தை நிர்வகிக்கும் திறமை இருந்தால் ஜெயித்துவிடலாம் என்று கூற உடனடியாக ராதிகா அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

அதன்பிறகு வீட்டுகு வரும் பாக்யாவுக்கு ஈஸ்வரி ஆரத்து எடுத்து அமக்களபப்டுத்திவிடுகிறார். மேலும் மாலை அணிவித்து பாராட்டுக்கிறார் தாத்தா. அதன்பிறகு பாக்யா ராஜசேகரை சந்திக்க செல்கிறார். அங்கு லோன் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்ல, தனது பைனான்சில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி பாக்யாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். பணத்தை பெற்றுகொண்ட பாக்யா மகிழ்ச்சியாக வீட்டுக்கு வந்து விஷயத்தை அனைவரிடமும் சொல்கிறார்.

தோற்ற விரக்தியில் வீட்டுக்கு வரும் ராதிகா, சோபாவில் கோபமாக உட்கார கோபி அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் உங்ககிட்ட நான் தேர்தலில் நிற்கிறேன் என்று கேட்டேனா? இதெல்லாம் எனக்கு தேவையா என்று கோபியிடம் கோபப்படுகிறார் ராதிகா. சும்மாவே இந்தி ஏரியாவில் எனனை பேசிக்கொண்டே இருப்பார்கள் இப்போ வெளியில தலைகாட்ட முடியாது.

நான் பாக்யாவை இன்னசென்ட்னு நினைத்தேன். ஆனால் அவர் அப்படி இல்லை. இனிமே ராதிகா யார்னு நான் காட்டுறேன் என்று சொல்கிறார். இதனால் கோபி வழக்கம்போல் தனது பாணியில் புலம்பிக்கொண்டிருக்க அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv baakiyalakshmi serial dec 14th episode update in tamil