விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல், கோபி மீண்டும் பாக்யா வீட்டிற்குள் வந்துள்ளதால் விறுவிறுப்படைந்துள்ளது.
இல்லத்தரசியின் சவால்களை மையமாகக் கொண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். அடுத்ததடுத்த திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையால் பாக்யலட்சுமி சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் சீரியலில் தற்போது பாக்யா வீட்டிற்குள் கோபி மீண்டும் வந்துள்ளதால் சீரியல் விறுவிறுப்பை அடைந்துள்ளது. இந்த வார எபிசோடில், உடல்நிலை சரியில்லாத தனது மகன் கோபியை பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வருகிறார் ஈஸ்வரி. கோபி வீட்டிற்குள் வந்தால் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று பாக்கியா எச்சரிக்கையை விடுத்திருந்தார். இருப்பினும் மகன் மீதுள்ள பாசம் காரணமாக கோபியை ஈஸ்வரி அழைத்து வருகிறார்.
இதனால் டென்ஷனான பாக்யா, தான் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார். ஆனால் எழில், மாமனார் ராமமூர்த்தி, இனியா மற்றும் மருமகள்கள் ஜெனி மற்றும் அமிர்தா ஆகியோர் பாக்யாவை தடுக்கின்றனர். ஒருகட்டத்தில் மாமனார் ராமமூர்த்தி இந்த வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் பாக்கியா வெளியேறக் கூடாது என்று தன் தலைமீது அடித்து சத்தியம் வாங்குகிறார். வேறு வழியில்லாமல் பாக்கியாவும் சத்தியம் செய்கிறார். முன்னதாக இந்த வீட்டிற்கு கோபியும் ராதிகாவும் வந்தபோது அவர்கள் கொடுத்த இம்சைகளை நினைத்து பாக்யா மனம் கலங்குகிறது.
/indian-express-tamil/media/post_attachments/4f44f775-07d.jpg)
இதனிடையே, ராதிகா தனது வீட்டில் தனது அம்மாவிடம் இதுகுறித்து கோபமாகவும் வருத்தமாகவும் பேசுகிறார். அவருடை அம்மா கூப்பிட்டவுடன் எதையும் யோசிக்காமல் கோபி புறப்பட்டு சென்றது ராதிகாவை கலக்கமடையச் செய்துள்ளது. கோயியை தான் திருமணம் செய்ய தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன்தான் காரணம் என்றும், முன்னதாக தான் தன்னுடைய மகள் மயூவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும் ராதிகா தனது அம்மா மீது குற்றம் சாட்டுகிறார்.
இதனிடையே இன்றைய எபிசோடில் செழியன் வீட்டிற்கு மாலினி மீண்டும் வருகிறார். அப்போது தன்னை பார்த்தவுடன் செழியன் சந்தோஷத்தை வெளிப்படுத்தாமல் உள்ளத்தை கூறுகிறார் மாலினி. மேலும், முன்பு வெளியில் சந்திக்கும் போதெல்லாம் செழியன் ரொம்ப ஜாலியாக பேசுவார் என மாலினி கூறுகிறார். இதைக் கேட்டு ஜெனி ஆச்சர்யமாக கேட்கிறார்.
அதேநேரம் மாலினி அடிக்கடி வீட்டிற்கு வருவது குறித்து பாக்யாவிடம் செல்வி சந்தேகம் எழுப்புகிறார். தனக்கும் அந்த சந்தேகம் உள்ளதாக பாக்கியாவும் ஒப்புக்கொள்கிறார். அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று செல்வி கூற பாக்கியாவின் குழப்பமும் அதிகரிக்கிறது. இதனிடையே, வீட்டிற்கு வர வேண்டாம் கூறியதை மீறி ஏன் வருகிறாய் என மாலினியிடம் செழியன் கேட்கிறார். அதற்கு மாலினி பதிலளிப்பதாக எபிசோட் காணப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“