செழியனை பிடித்திருப்பதாக சொல்லும் மாலினி; கோபியாக மாறுகிறாரா செழியன்? பாக்யலட்சுமி சீரியல்
தனது பிரச்சனைகளை சொல்லி ஆறுதல் அடைய நீங்கள் வேண்டும் செழியன் என மாலினி சொல்ல செய்வதறியாது தவிக்கிறான் செழியன். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு கோபி போதும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Advertisment
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ரசிகர்களின் பெரிய வரவேற்பு காரணமாக ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் காண்டாகி வருகின்றனர். அந்த வீடியோவில், மாலினியை பார்க்க போன இடத்தில் வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி வருத்தப்பட்டு, இப்ப இருக்கிற டென்ஷனுக்கு சரக்கடிக்கலாம் போல இருக்கு என்று செழியன் சொல்ல, உடனே மாலினி சரக்கு கொண்டு வந்து குடிக்க சொல்கிறார். செழியன் குடிக்க மறுத்து பிறகு குடிக்கிறான்.
Advertisment
Advertisement
அப்போது மாலினி உங்க குடும்பத்தில் என்ன பிரச்சனைனு கேட்க, அது வேண்டாம் என சொல்ல மறுக்கிறான் செழியன். உடனே எந்த பிரச்சனையா இருந்தாலும் அது சீக்கிரம் சரியாகிடும் என ஆறுதல் சொல்கிறாள் மாலினி. பின்னர் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா என செழியன் கேட்க, சொந்தமான ஆபிஸ் இருக்குற எனக்கு பிரச்சனை இருக்காதுனு நினைச்சீங்களா?, இருந்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடலாம். ஆனா நம்ம வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை சொல்ல ஆள் இல்லைங்கிறது தான் பெரிய பிரச்சனை என்று கலங்குகிறாள் மாலினி.
அப்போது ஆறுதல் சொல்லும் செழியனிடம், இதைஎல்லாம் யாரிடமும் சொல்லாமல் மறைச்சு சிரிச்சுக்கிட்டு தான் இருந்தேன். ஆனா உங்களை பார்த்ததும் எல்லாமே சொல்லனும்னு தோணுது என்கிறாள் மாலினி. இதைக்கேட்டு தவிக்கும் செழியனின் கையைப் பிடித்து உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்கிறாள் மாலினி. இதனால் அதிர்ச்சியாகும் எழில், உடனடியாக அங்கிருந்து கிளம்புகிறான்.
மாலினியின் விருப்பத்தை ஏற்காமல் அங்கிருந்து கிளம்பும் செழியனை தப்பிச்சீட்டீங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு சில ரசிகர்களோ ஒரு கோபி போதும் என கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil