Advertisment

புதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்

Vijay TV baakiyalakshmi serial one year telecast celebrations: ஒரு வருட ஒளிப்பரப்பை நிறைவு செய்த விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல்; சூட்டிங் ஸ்பாட் கொண்டாட்ட புகைப்படங்கள்

author-image
WebDesk
New Update
புதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு வருடம் நிறைவடைந்ததை சீரியல் குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

Advertisment

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் சுசித்ரா, விஷால், ரித்திகா, ரேஷ்மா, சதீஷ்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அன்பான குடும்பம் இருக்கும் கோபி, வேறு ஒரு திருமணம் ஆன பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் எழில் – அம்ரிதா காதல் என்றும் சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் பெங்காலியில் ஒளிப்பரப்பான ஸ்ரீமாயி சீரியலின் பதிப்பு தான் என்றாலும், இதன் கதை மற்றும் திரைக்கதைக்காக, ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27, 2020 முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல், தற்போது ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதனை பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியாக நடிக்கும், கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இன்றோடு பாக்யலட்சுமி ஆரம்பித்து ஒன் இயர் ஆகுது வழ்த்துக்கள் எங்கள் ட்டீம்க்கு.....எங்களுக்கு ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றிகள்....என்றும் உங்கள் ஆதரவோடு........என பதிவிட்டுள்ளார். இந்த சீரியலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு சீரியல் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment