விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Advertisment
இந்த வாரத்திற்கான ப்ரோமோவில், பர்த்டே ஃபங்ஷனுக்கு சமைத்தற்கு பாக்யாவிடம் பணம் கொடுத்து விட்டீர்களா என பழனிச்சாமி தன் தாயாரிடம் கேட்கிறார். பாக்யா வாங்க மறுத்துவிட்டதாக பழனிச்சாமியின் தாயார் கூறுகிறார். இதனையடுத்து பாக்யா ஹோட்டலுக்கு வரும் பழனிச்சாமி, சமைத்ததற்கான பணத்தை பாக்யாவிடம் கொடுக்கிறார்.
ஆனால், அன்புக்கு விலை பேசாதீங்க, என பாக்யா பணத்தை வாங்க மறுக்கிறார். இதனையடுத்து காதல் கிறுக்கு பிடித்தவர் போல் அலைகிறார் பழனிச்சாமி. காரில் செல்லும் போது டிராபிக் போலீஸார் நிறுத்த, மெய் மறந்து காரை நிறுத்தாமல் செல்கிறார். பின் தொடர்ந்து வந்து, மறித்து போலீசார் அபராதம் போடும்போது, காதல் மோடில் இருக்கும் பழனிச்சாமி, அன்புக்கு விலை பேசாதீங்க என கூறுகிறார். இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனால், பழனிச்சாமி பாக்யாவிடம் தன் காதலைச் சொல்வாரா, பாக்யா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்தது. இதற்கு விடை தெரிந்துக் கொள்ளும் வகையில் ரசிகர்களும் இந்த வார எபிசோடுகளை காண ஆர்வத்துடன் உள்ளனர்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“