scorecardresearch

Bagyalakshmi Serial: அபாண்டமான கொலை முயற்சி பழி… போற போக்கை பாத்தா ராதிகா ஹீரோயின் ஆயிடுவாங்க போல!

குடும்பமே ராதிகாவை பாராட்டும் படி ஒரு செயலை செய்துள்ளதால் அவர் ஹீரோவாகிவிட இதுவரை ஹீரோவாக இருந்த பாக்யாக குடும்பத்திற்கு வில்லியாக மாறிவிடுவாரோ?

Baakiyalakshmi
பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிக்கு உதவிய ராதிகா மீது ஈஸ்வரி பழி போடுவதால் ரசிகர்கள் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு உண்டான வரவேற்பு குறைந்துள்ளதாக தெரிகிறது.

கர்ப்பமாக இருக்கும் ஜெனி வீ்ட்டில் தனியாக இருக்கும்போது தவறுதலாக கீழே விழுந்துவிடுகிறார். இதனால் வலி தாங்க முடியாமல் அழும் ஜெனி செழியனுக்கு போன் செய்ய அவன் போனை எடுக்கவில்லை. ஆபீஸ் விஷயமாக ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறான். அதன்பிறகு பாக்யாவுக்கு போன் செய்தால் அவரும் எடுக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாள் ஜெனி.

அப்போது ஆபீஸ் கிளம்பும் ராதிகா ஜெனியிடம் விசாரிக்க அவர் நடந்தை கூறுகிறார். குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் என்று சொல்ல வா ஹாஸ்பிடல் போகலாம் என்று ராதிகா ஜெனியை கூட்டிச்செல்கிறார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிடுகிறார்.

இதற்கிடையே ராதிகா பாக்யாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் பாக்யா உடனடியாக ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அவருடன் செழியனும் வருகிறார். இருவரும் ஜெனியை பார்க்கின்றனர். நீங்கள் இல்லனா ஜெனிக்கு என்ன ஆகியிருக்கும்னு தெரியா ரொம்ப தேங்ஸ் என்று பாக்யா சொல்ல ராதிகா ஆபீஸ்க்கு கிளம்பி போய்விடுகிறார்.

அதன்பிறகு ஜெனியை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு கூட்டி வருகின்றனர். வீட்டில் நடந்ததை அமிர்தா பாட்டியிடம் சொல்கிறார். இதை கேட்ட பாட்டி ஈஸ்வரி ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார். அதன்பிறகு ஜெனி செழியனுடன் மாடிக்கு சென்றுவிட ராதிகா எதற்காக அவளை ஹாஸ்பிடல் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று கேட்க நீங்கள் யாரும் இல்லை அதனால் நான் கூட்டிக்கொண்டு போனேன் என்று சொல்கிறார்.

அப்போ ஜெனிய நீதான் தள்ளிவிட்டியா என்று கேட்க ராதிகா அதிர்ச்சியாகிறார். அத்துடன் எபிசோடு முடிகிறது. இதுவரை வில்லியாக இருந்த ராதிகா ஜெனி சம்பவத்தின் மூலம் ஹீரோவாவிட்டார். இதன்பிறகு நமக்கு ஹெல்ப் பண்ணாங்களே என்று ஜெனியும் ராதிகாவிடம் பகை காட்டாமல் இருப்பார். ஏற்கனவே அப்பா பக்கம் இருக்கும் செழியன் இப்போது முழுவதுமாக சித்தி (ராதிகா) பக்கம் மாறிவிட வாய்ப்பு உள்ளது. உண்மை என்ன என்று தெரியவந்தால் பாட்டி ஈஸ்வரி கூட ராதிகாவுக்கு சப்போர்ட் செய்யவும் வாய்ப்புள்ளது.

இப்படி குடும்பமே ராதிகாவை பாராட்டும் படி ஒரு செயலை செய்துள்ளதால் அவர் ஹீரோவாகிவிட. இதுவரை ஹீரோவாக இருந்த பாக்யாக குடும்பத்திற்கு வில்லியாக மாறிவிடுவாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv baakiyalakshmi serial radhika jani episode update