Advertisment

சீரியலில் எதிரி... நிஜத்தில் ஃப்ரண்ட்ஸ்: மாடர்ன் ராதிகாவுடன் கொஞ்சும் எழில்!

Vijay TV Baakiyalakshmi serial Reshma and VJ Vishal photo goes viral: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவுடன் விஷால் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
சீரியலில் எதிரி... நிஜத்தில் ஃப்ரண்ட்ஸ்: மாடர்ன் ராதிகாவுடன் கொஞ்சும் எழில்!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவுடன் எழில் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக சுசித்ராவும், கோபியாக சதீஷ்குமாரும் நடித்து வருகின்றனர். இதேபோல் எழில் கதாப்பாத்திரத்தில் விஷாலும் அம்ரிதாவாக ரித்திகாவும் நடித்து வருகின்றனர். இதில் ராதிகா எனும் சவாலான கேரக்டரில் ரேஷ்மா நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு குடும்பத்தலைவிகள் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தி வருவதால் இல்லத்தரசிகளிடம் இந்த சீரியல் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சீரியலின் கதையைப் பொறுத்தவரை, காதலித்த பெண்ணை விட்டுவிட்டு பெற்றோர் கட்டாயத்தால், படிக்காத பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அவரை எப்போதும் அவமானப்படுத்தி வருகிறார். மேலும், தன் காதலி ராதிகாவை வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வருகிறார். இதற்கிடையில் பாக்கியாவும் ராதிகாவும் தோழிகள் ஆகின்றனர். பாக்கியாவின் கணவர்தான் கோபி என்பதை ராதிகாவுக்கு தெரியாமல் மறைத்து வருகிறார் கோபி..

ராதிகாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தன் வீட்டிற்கு தெரியாமல் ராதிகாவைச் சந்தித்து வருகிறார் கோபி. இதனை தற்செயலாக பார்த்துவிடும் கோபியின் மகனான எழில் கோபியை எச்சரிக்கிறார். ஆனாலும் கோபி ராதிகாவை அடிக்கடி சந்தித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலின் கதை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது

ராதிகா கதாப்பாத்திரத்தில் இதற்கு முன் நந்திதா ஜெனிபர் நடித்து வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ள நிலையில், தற்போது ரேஷ்மா அந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் விநாயகர் சதுர்த்திக்காக எடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீரியலில் எப்போதும் புடவையில் இருக்கும் ரேஷ்மா, அந்த புகைப்படத்தில் மார்டன் டிரஸ்ஸில் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Reshma Bakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment