Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி சீரியலில், வளர்ந்த பிள்ளைகளின் தாயான பாக்யலட்சுமி தனது குடும்பம்தான் தனது உலகமாக நினைக்கிறாள். மத்திய வயதில் இருக்கும் அவள், சுயமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். குடும்பத்தினரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்கிறாள். ஆனால், கணவன் கோபி அன்பான மனைவி பாக்யலட்சுமியை விட்டுவிட்டு முன்னாள் காதலி ராதிகாவைத் தேடிச் செல்கிறான். ராதிகாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். இதனை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள்தான் கதை.
ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷை தேடிவரும்போது அங்கே செல்லும் கோபி அவனை அடித்து விரட்டுகிறான். அவளை விட்டு பிரியமாட்டேன் என்று வாக்குறுதி அளிக்கிறான்.
இந்த சூழலில்தான், ராதிகாவின் மகள் மயூ பாக்யலட்சுமியின் பக்கத்துவீட்டுக்காரர் மூலமாக தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மயூ வீட்டுக்கு வந்திருப்பது அறிந்த கோபி, தான் ராதிகா வீட்டுக்கு செல்வதை மயூ தன்னை காட்டிக்கொடுத்துவிடுவாளோ பயப்படுகிறான். ஆனாலும், விட்டுக்கு வரும் கோபி, ராதிகா மகள் மயூ குடும்ப போட்டோ எதையும் பார்த்துவிட கூடாது என்பதற்காக பெயிண்ட் அடிக்கும் ஆட்களை வரவழைத்து அணைத்து போட்டோக்களையும் கழற்றி வைத்துவிடுகிறார்.
பாக்யலட்சுமி சீரியலில், நேற்றைய எபிசோடில், ராதிகா மகள் மயூ, மாஸ்க் அணிந்திருந்த கோபியைப் பார்த்து இந்த அங்கிளை எங்கயோ பார்த்திருக்கேன் என்று சொல்ல அரண்டு போகிறார்.
அப்போது, மயூ, “எங்க ஸ்கூல் PET மாஸ்டர் போல இருக்கீங்க…” என்று சொல்கிறாள். இதைக் கேட்டு, வீட்டில் அனைவரும் சிரிக்கிறார்கள். இதையடுத்து, எழில் கோபியின் நடவடிக்கைகளை பற்றி சந்தேகம் எழுப்புகிறான். எதோ தவறாக இருக்கிறது என அவர் சொல்கிறார். ஆனால் மற்றவர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
மயூவுக்கு பயந்து ஜூரம் வந்துவிட்டதாக செம்ம டிராமா போட்ட கோபி
வீட்டில் இரவு அனைவரும் சாப்பிட காத்திருக்கிறார்கள். அப்போது, கோபி மட்டும் வரவில்லை. கோபிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க பாக்யலட்சுமி செல்கிறார். பாக்யலட்சுமி வருவதைப் பார்த்து, கோபி நெற்றியில் ஈரத் துணியை போட்டுக்கொண்டு தனக்கு ஜுரம் வந்துவிட்டது என சொல்லி நடிக்கிறார்.
கோபி, தனக்கு ஜுரம் வந்துவிட்டடாக நடிக்கும்போது, சாமி என்னா நடிப்புடா உலக மகா நடிப்பு என்று சொல்லும் படி நடிக்கிறார். அதைவிட, தூசி காரணமாக தனக்கு அலர்ஜி ஏற்பட்டு ஜுரம் வந்துவிட்டது என சொல்லும்போது, பார்வையாளர்கள் ‘அடப்பாவி என்னமா நடிக்கிறான்’ என்று சொல்ல வைக்கிறார்.
கோபிக்கு ஜுரம் என்றதால் அவரைப் பார்க்க அவரது அப்பா, அம்மா, செழியன் ஆகியோர் பெட் ரூமுக்கு சென்று அவரைப் பார்க்கிறார்கள். நல்லா இருந்த கோபிக்கு எப்படி திடீரென ஜுரம் வந்தது என்று கோபியின் அப்பா கேள்வி கேட்கிறார். அதற்கு, கோபியின் அம்மா, “குடும்பத்தின் மீது கண் பட்டுவிட்டது” என்று சொல்கிறார்.
கோபியின் மகன் செழியன், தந்தை கோபிக்கு ஜுரம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்க தெர்மாமீட்டர் எடுத்து வருகிறார். அப்போது, உடல் வெப்பநிலை நார்மல்தான் என காட்டுகிறது. அதற்கு, கோபி தான் 2 மாத்திரை சாப்பிட்டதால் ஜுரம் குறைந்துவிட்டது என திரும்பத் திரும்பச் சொல்லி சமாளிப்பதைப் பார்க்கும் பார்வையாளர்கள் சமாளித்துவிடுகிறார்.
அப்போது, கோபி குழந்தையை மட்டும் இங்கு கூட்டிட்டு வராதீங்க, அவளுக்கும் ஜுரம் வந்துவிடப்போகிறது என சொல்கிறான்.
சுடு தண்ணீரில் தெர்மா மீட்டரை வைத்து கோபி செய்த உலகமகா தந்திரம்
இதையடுத்து, கோபிக்கு ஜுரம் என்று கேள்விப்பட்டு, எழில், இனியா இருவரும் கோபியை பார்க்க வருகிறார்கள். எழில் தெர்மாமீட்டரை எடுத்து கோபியின் கையில் வைக்கிறான்.
தெர்மா மீட்டர் ஜுரம் இல்லை என்பதைக் காட்டி கொடுத்துவிடுமே என்ன செய்வது என்று யோசிக்கும் கோபி, அவர்கள் இருவரையும் மாத்திரை எடுக்க சொல்லி திசைதிருப்பிவிட்டு தெர்மாமீட்டரை எடுத்து சுடுதண்ணீரில் வைக்கிறார். இத்துடன் இந்த எபிசோடு நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“