19 வயது வித்தியாசம்... தங்கச்சி பாப்பா போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

Vijay TV bakiyalakshmi serial actress nehah menon release her sister photo: இன்ஸ்டாகிராமில் தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்; ரசிகர்கள் வாழ்த்து

Vijay TV bakiyalakshmi serial actress nehah menon release her sister photo: இன்ஸ்டாகிராமில் தனது தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்; ரசிகர்கள் வாழ்த்து

author-image
WebDesk
New Update
19 வயது வித்தியாசம்... தங்கச்சி பாப்பா போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை, மூன்று மாத குழந்தையான தன் தங்கையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுள் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியாவின் மகள் இனியாவாக நடித்து வருபவர் நேஹா மேனன்.

நேஹா மேனன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். தனது அம்மா கர்ப்பமாக இருந்ததாகவும், தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால் தான் அக்கா ஆகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கு நெட்டிசன்களில் சிலர் நேஹாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலர் இந்த விஷயத்தை விமர்சிக்கவும் செய்தனர். ஏனெனில் நேஹாவுக்கு அவரதும் தங்கைக்கும் 19 வயது வித்தியாசம். ஆனால் நேஹா இது போன்ற விமர்சனங்களைக் கண்டு கொள்ளவில்லை.

Advertisment
Advertisements

இந்த நிலையில் நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நேஹா மூன்று மாத குழந்தையான தனது தங்கையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும், அதில், “இவள் எனது தங்கை, இவளுக்கு சாஹிதி என்று பெயர் வைத்துள்ளோம். நாங்கள் இவளை சிக்கு, பூந்தி எனவும் கூப்பிடுவோம், நான் 19 வயதைக் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு க்யூட்டான என் தங்கையின் மூலம் கடவுள் என்னையும் எனது பெற்றோரையும் ஆசீர்வதித்துள்ளார், நீங்கள் அவள் மீது பொழிந்த அனைத்து அன்பிற்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் முற்றிலும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்! சிக்கு இப்போது எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகிவிட்டாள்! நான் அதிர்ஷ்டசாலி! இல்லையா! ?? யாரும் ஒரே நேரத்தில் அம்மா மற்றும் சகோதரியின் உணர்வுகளைப் பெற மாட்டார்கள்! நான் உங்களுக்கு சொல்கிறேன், இந்த உணர்வு அற்புதமானது!, சாஹிதி ஒரு வைரத்தைப் போல பிரகாசிக்கப் போகிறாள், நாங்கள் அவளை ஒன்றாக வளர்ப்போம், தோழர்களே, பெண்கள் மிகவும் வலிமையானவர்கள், நாம் அன்பினால் பிறந்தவர்கள் !! அன்பு என்றால் அம்மா!” என பதிவிட்டுள்ளார். நேஹாவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் லைக் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bakiyalakshmi Serial Neha Menon Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: