விஜய் டிவி சீரியலில் பொறுப்பான பாக்யா அம்மா… நிஜத்துல என்னா டான்ஸர் பாருங்க

vijay tv bakiyalakshmi serial fame suchitra viral dance video: சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சுசித்ரா ரங்கீலா மாரோ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் சுசித்ரா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல நிலையில் உள்ளது. அம்மா மகன் பாசம் இந்த சீரியலில் பிரதானமாக உள்ளது. தற்போது இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபிநாத், இன்னொரு பெண்ணுடன் நெருங்கி பழகுவதாக கதை செல்கிறது.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிப்பவர் சுசித்ரா. இவர் நாணல் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில கன்னடப் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ நெட்டிசன்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சுசித்ரா ரங்கீலா மாரோ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார் சுசித்ரா.

பாக்கியலட்சுமி சீரியலில் அப்பாவி மனைவியாகவும், டீச்சராகவும் நடிக்கும் சுசித்ராவின் இந்த நடனத்தை நெட்டிசன்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் என்ன பாக்கியா இதெல்லாம் என கமெண்ட்டில் கேட்டுள்ளார். சுசித்ராவின் இந்த நடன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மற்றொரு வீடியோவில், பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேஹா மேனனுடன் சேர்ந்து ஒரு ஹிந்தி பாடலுக்கு உதடு மற்றும் கண்ணை அசைத்து க்யூட்டான எக்ஸ்பிரசன் கொடுத்துள்ளார் சுசித்ரா. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bakiyalakshmi serial fame suchitra viral dance video

Next Story
மளமளவென வளர்ந்த 2 மகள்களுடன் காரக்குழம்பு கனி: இப்படி ஜோடியா பார்க்க எவ்ளோ அழகா இருக்கு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com