scorecardresearch

Vijay TV Serial: கோபி ஆபீசில் ராதிகா; திடீரென அங்கே வரும் பாக்யா!

Vijay TV Bakiyalakshmi serial today episode bakiya, radhika in gopi office: கோபியை பார்க்க அவன் ஆபிஸூக்கு வரும் ராதிகா, சாப்பாடு டெலிவரிக்காக கோபியின் ஆபிஸீக்கு வரும் பாக்கியா, இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

கோபிக்கு போன் செய்யும் ராதிகா, உங்களோட ஆபிஸில் இருக்கேன் என சொல்ல, சந்தோஷமாகும் கோபி, ராதிகாவை பார்க்க வருகிறான். ராதிகாவை கோபி நெருக்கமாக அழைத்துச் செல்வதை ஆபிஸில் உள்ள எல்லோரும் பார்க்கிறார்கள். இருவரும் கோபியின் அறைக்கு வர, பிஸியா இருக்கீங்களா என கேட்கிறாள் ராதிகா. நீ வந்ததால் எந்த வேலையும் முக்கியம் இல்லை என்கிறான் கோபி. பின்னர், சாப்பிடலாமா என கோபி கேட்க, நீங்க சாப்பாடு எடுத்துட்டு வரலையா என கேட்கிறாள் ராதிகா. எங்க வீட்டில் அதெல்லாம் செய்து தர மாட்டாங்க என கோபி சொல்ல, எனக்கு டீச்சர் தான் தினமும் சாப்பாடு கொடுத்துவிடுறாங்க என்கிறாள். பின்னர் தனது உதவியாளரை அழைத்து, நல்ல வீட்டுச் சாப்பாடு ஆர்டர் கொடுக்க சொல்கிறான் கோபி.

நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என யோசிக்கும் கோபியின் உதவியாளர், பாக்கியாவுக்கு போன் செய்து சாப்பாடு ஆர்டர் கொடுக்கிறான். பாக்கியா சாப்பாடு கொடுக்க கோபியின் ஆபிஸூக்கு செல்வியோடு புறப்படுகிறாள். வரும் வழியில், செல்வியிடம் கோபியின் ஆபிஸூம் இந்த ஏரியாவில் தான் இருக்கு, ஆனா எங்கனுதான் தெரியலை என்கிறாள். பின்னர் இருவரும், சாப்பாடு ஆர்டர் கொடுக்கும் இடத்திற்கு வர, அது கோபியின் ஆபிஸ் என தெரிந்து சந்தோஷமாகிறாள் பாக்கியா.

பாக்கியாவை பார்த்ததும் ஆச்சரியமாகிறான் கோபியின் உதவியாளர். இதுதான் நம்ம ஆபிஸ் என்று எனக்கு தெரியாது என்கிறாள் பாக்கியா. உடனே பாக்கியாவை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்கிறான் கோபியின் உதவியாளர். பிஸினஸ் பத்தி அவர் கேட்க, நிறைய பேர் வேலை செய்யுறாங்க, எல்லாம் வெளியில் போனதால் நாங்க கொண்டு வந்தோம் என பொய் சொல்கிறாள் பாக்கியா. பின்னர் கோபி எங்க என கேட்க, உள்ள தான் இருக்காரு, அவருக்கு தான் சாப்பாடு என உதவியாளர் சொல்ல, அவரு சாப்பாடு எடுத்துட்டு வந்தாரே என சந்தேகமாகிறாள் பாக்கியா. சார் கூட கெஸ்ட் இருக்காங்க, சாப்பாடு அவங்களுக்காக இருக்கலாம் என உதவியாளர் சொல்ல, கோபியை பார்க்க, விரும்புகிறாள் பாக்கியா.

அப்போது, லேட் ஆயிடுச்சு என உதவியாளருக்கு போன் செய்து சாப்பாடு என்ன ஆச்சு என கோபி கேட்க, வந்துருச்சு சார், ஆனா இங்க மேடம் வந்துருக்காங்க என சொல்கிறான். மேடம் யாரு என கோபி கேட்க, உங்க மனைவி என்று சொல்கிறான் உதவியாளர். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் கோபி, நான் வெளியில் வர்றேன், உள்ள அனுப்பாதே என்று சொல்லிவிட்டு வெளியில் செல்கிறான். கோபி டென்ஷனாக இருப்பதை பார்த்து, நான் கிளம்புறேன் என சொல்லும் ராதிகாவிடம், இல்லை நீ இங்கேயே சாப்பிடு, நான் 5 நிமிஷத்தில் வந்துடுறேன் என சொல்லிவிட்டு செல்கிறான்.  இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bakiyalakshmi serial today episode bakiya radhika in gopi office