தமிழ் தொலைக்காட்சிகளின் பெரிய பலம் சீரியல்கள்தான். அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சீரியல் எது என்று டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஒரு பெரிய போட்டியே நிலவுகிறது. இதில் விஜய் டிவியின் 2 சீரியல்கள் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.
தமிழ் தொலைக்காட்சிகளின் பெரிய பலம் சீரியல்கள்தான். அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சீரியல் எது என்று டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஒரு பெரிய போட்டியே நிலவுகிறது. இதில் விஜய் டிவியின் 2 சீரியல்கள் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் டாப் 5 சீரியல்கள் தரவரிசையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவைத் தொடர்ந்து பாக்யலட்சுமி சீரியல் இடம் பெற்றுள்ளது.
Advertisment
டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் அடிப்படையில் இந்தியாவின் ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் ஒவ்வொரு வாரமும் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இந்தியாவின் ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரையில் 17வது வாரத்துக்கான தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே போல, ஒவ்வொரு மொழியிலும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி தரவரிசையையும் வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், இந்திய அளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சேனலாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஸ்டார் உத்சவ் டிவியும் 3வது இடத்தை சன் டிவியும் பிடித்துள்ளது. ஸ்டார் விஜய் 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
Advertisment
Advertisements
அதே போல, தமிழ் மொழி தொலைக்காட்சிகளில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஸ்டார் விஜய் 2வது இடத்தையும் ஜீ தமிழ் 3வது இடத்தையும் கே டிவி 4வது இடத்தையும் ஸ்டார் விஜய் சூப்பர் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளின் பெரிய பலம் சீரியல்கள்தான். அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் சீரியல் எது என்று டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஒரு பெரிய போட்டியே நிலவுகிறது. ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30 வரையில் 17வது வாரத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5 இடங்களைப் பிடித்த சீரியல்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி தொடர்ந்து ஆதிக்க செலுத்தி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்து கடந்த வாரம் சன் டிவியில் ஒளிபரப்பான கொம்பன் திரைப்படம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. 4வது இடத்தை சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் பிடித்துள்ளது. 5வது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி சீரியல் இடம் பிடித்துள்ளது.
தமிழ் தொலைகாட்சி சீரியல்களில் சன் டிவி சீரியல்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் முதல் இடத்தைப் பிடித்தது. பிறகு ஒரு படி இறங்கி 2 அல்லது 3 இடத்தைப் பிடித்து வந்தது. இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலைத் தொடர்ந்து விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.
பாக்யலட்சுமி சீரியலில், வளர்ந்த பிள்ளைகளின் தாயான பாக்யலட்சுமி தனது குடும்பம்தான் தனது உலகமாக நினைக்கிறாள். மத்திய வயதில் சுயமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். குடும்பத்தினரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்கிறாள். ஆனால், கணவன் கோபியோ அன்பான மனைவி பாக்யலட்சுமியை விட்டுவிட்டு முன்னாள் காதலி ராதிகாவைத் தேடிச் செல்கிறான். இதனை ஒட்டி நடக்கும் நிகழ்வுகள்தான் கதை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"