இனியா செய்த தவறுக்கு பாக்யாவுக்கு தண்டனையா?

Vijay TV Serial: பாக்யலட்சுமி ஆசையாக தொடங்கிய மசாலா பிஸினஸ் மகள் இனியா செய்த தவறால் அடித்து நொறுக்கப்பட்டு தடைபட்டதோடு அதை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்காதது பார்வையாளர்களை உச் கொட்ட வைத்துள்ளது.

vijay tv, bakyalakshmi serial, vijay tv serial, bakyalakshmi serial today episode, விஜய் டிவி, பாக்யலட்சுமி சீரியல், பாக்யலட்சுமி, பாக்யலட்சுமி எபிசோடு, இனியா, கோபிநாத், bakya asks permission to restart masala business, bakyalakshmi, vijay tv serial bakyalakshmi, bakyalakshmi today episode, tamil serial news

Vijay TV Serial: விஜய் டிவியியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல், ஒரு குடும்பத் தலைவி வளர்ந்த பிள்ளைகள் உள்ள நிலையில், எப்படி கணவனின் ஆதிக்கம் மற்றும் குடும்ப நெருக்கடிகளைத் தாண்டி சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்வதை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

பாகியலட்சுமி மற்றும் கோபிநாத் திருமணமாகி ஒரு கூட்டு குடும்ப அமைப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு செழியன், எழில் மற்றும் இனியா என்ற மூன்று வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். பாகியலட்சுமி ஒரு மென்மையான இயல்புடைய அப்பாவிப் பெண். அவள் தனது குடும்பத்தை மிகவும் நேசிக்கிறாள். அவர்களுக்காகவே வாழ்கிறாள். அவளைப் பொறுத்தவரை, குடும்பம்தான் அவளுடைய உலகம். அதை தாண்டி அவளுக்கு எதுவும் தெரியாது. ஆனால், பாக்யலட்சுமியின் கணவர் கோபிநாத் அவளை விரும்புவதில்லை. அவளை அவமானப்படுத்துகிறார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய விரும்பிய தனது முன்னாள் காதலி ராதிகாவுடன் வாழ முயற்சிக்கிறார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மயூரி என்ற மகள் இருக்கிறாள். ராதிகா தனது கணவரை விவாகரத்து செய்தார். கோபிநாத் ராதிகாவைச் சந்தித்து அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்லத் தொடங்குகிறார். மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பா வயதினராக இருந்தாலும், மற்றொரு பெண்ணின் பின்னால் செல்லும் தனது கணவரின் வக்கிர புத்தியைப் பற்றி பாக்யாவுக்கு தெரியாது. கோபினாத்தின் குடும்பத்தைப் பற்றி ராதிகாவுக்குத் தெரியாது. அவள் பாக்யாவுடன் நட்பு கொள்கிறாள். அவளுடன் ஒரு நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறாள். தனது குடும்பம்தான் தனது உலகம் என்று பாக்யா நினைத்தாலும், அவள் தன் உலகில் தனியாக இருப்பதை அவள் விரைவில் உணர்கிறாள். அவள் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முடிவு செய்கிறாள்.

அதன்படி, பாக்யலட்சுமி தான் ஆசையாக ஆரம்பித்த மசாலா வியாபாரம் அவளுடைய மகள் இனியா செய்த தவறால் கோபியால் அடித்து நொறுக்கப்பட்டு தடைபடுகிறது. அந்த மசாலா வியாபாரத்தை மீண்டும் தொடங்க எதாவது செய்யலாம் என பாக்யா முயற்சிக்கிறார்.

ராதிகா போன் செய்தால், அவருக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் ஆர்டர் வந்திருக்கிறது. அதனால் பாக்யா மீண்டும் தனது மசாலா பிஸினஸ் பணிகளை செய்ய குடும்பத்தினரிடம் அனுமதி கேட்கிறாள். குடும்ப வேலைகளை செய்த பிறகு, அனைவரும் தூங்கிய பிறகு தான் இந்த வேலைகளை செய்யப் போகிறேன் என்று கூறுகிறார்.

ஆனால், கணவன் கோபி, பாக்யா சொல்வதை ஏற்காமல், நீ அந்த வேலையை செய்தால், அம்மா, அப்பாவை கவனிக்க முடியாமல் அவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்று கூறுகிறான். நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் என கூறிவிட்டேன், குடும்பத்தை மட்டும் பார். வேறு எதுவும் வேண்டாம் என மீண்டும் கூறுகிறார். அப்போது குறுக்கிட்டு பேசும் செழியனின் மனைவியை அடக்க செழியனிடம் குறிப்பால் கூறுகிறான்.

ராதிகாவிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என பாக்யா தொடர்ந்து கூறுகிறாள். அந்த பணத்தை நான் கொடுக்கிறேன். கடனை கட்டிவிட்டு வீட்டில் நிம்மதியாக இரு என தாத்தா அறிவுறை கூறுகிறார்.

மசாலா பிஸினெஸ் வேண்டாம் என சொல்லும் கோபிகூட பணம் தருகிறேன் என முன்வரவில்லை. அதன் பிறகு, இனியா சென்று கோபியிடம் பேசுகிறார். நான் செய்த தவறுக்கு ஏன் அம்மாவை தண்டிக்கிறீர்கள். அவங்க என்னை கேட்டுட்டுதான் இருந்தாங்க, நான் தான் பொய் சொன்னேன் என கோபியிடம் சொல்கிறார்.

அதற்கு கோபி மகள் இனியாவிடம் நீ படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. எது நல்லது என எனக்கு தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன் என இனியாவை அமைதியாக்குகிறார்.

அடுத்த காட்சியில், ராதிகா தனது மகள் உடன் வீட்டில் இருக்கும்போது அவரது கணவர் ராஜேஷ் உள்ளே வந்து ரகளை செய்கிறார். வீடு மாறிவிட்டால் எனக்கு தெரியாதா என கேட்கிறார். அவரை பார்த்து மகள் மயூரியும் பயந்து போகிறாள். இதையடுத்து, ராதிகா தனது முன்னாள் கணவர் ராஜேஷை அடித்து வெளியில் தள்ளி விடுகிறார். இப்படி ஒரு பரபரப்பான சூழலில் பாக்யலட்சுமி சீரியலின் ஏப்ரல் 17ம் தேதி எபிசோடு நிறைவடைந்தது.

பாக்யலட்சுமி ஆசையாக தொடங்கிய மசாலா பிஸினஸ் மகள் இனியா செய்த தவறால் அடித்து நொறுக்கப்பட்டு தடைபட்டதோடு அதை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்காதது பார்வையாளர்களை உச் கொட்ட வைத்துள்ளது. அடுத்த எபிசோடில், பாக்யலட்சுமி மசாலா பிஸினஸை தொடங்குவதற்கு குடும்பத்தினரின் அனுமதி கிடைக்குமா? ராதிகா தனது கணவன் ராஜேஷை எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்பது தெரியவரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bakyalakshmi serial today episode story bakya asks permission to restart masala business

Next Story
ஆஹா, அழகு..! ‘ராணி’யாக மாறிய முல்லை; இது எப்போ?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X