200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000: வீடு தேடி உதவித்தொகை வழங்கிய நடிகர் பாலா

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கியுள்ளார் நடிகர் பாலா.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கியுள்ளார் நடிகர் பாலா.

author-image
WebDesk
New Update
Vijay Tv Bala Actor gives stipend to 200 families Rs 1000 Cyclone Michaung CHENNAI Tamil News

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

Vijya-tv | bala: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிய 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாவனர் பாலா. இவர் விஜய் டி.வி-யின் 'குக் வித் கோமாளி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார். டி.வி, மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

சமூக சேவை

Advertisment

நடிகர் பாலா தனது நடிப்பின் மூலம் ஈட்டிய பணத்தை கொண்டு பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். சமூக சேவையும் செய்து வரும் அவர் அண்மையில் ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

உதவி 

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கியுள்ளார். அவருடன் விஜய் டி.வி நடிகர் அமுதவாணனும் உடனிருந்தார். 

இதுதொடர்பாக நடிகர் பாலா பேசுகையில்,"என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்" என்றார். அவரது இந்த பெரும் உதவிக்கு ரசிகர்களும், மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் பாலா உதவி வழங்கும் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Bala Vijya Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: