Advertisment

பாரதிக்கு பணிவிடை… குழந்தைகளுக்கு அறிவுரை… கண்ணம்மா ரொம்பவே நெருங்கிட்டாங்க!

பாரதியும் கண்ணம்மாவும் பல எபிசோடுகளாக பிரிந்தே இருப்பதால், இருவரும் எப்போது சேர்வார்கள், வெண்பாவை எப்போது விரட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த சூழலில்தான் இருவரும் நெருங்கிவிட்ட ஒரு புரோமோ வெளியாகி இருக்கிறது.

author-image
WebDesk
Aug 11, 2021 20:41 IST
Barathi Kannamma serial, Barathi Kannamma serial latest promo, பாரதி கண்ணம்மா சீரியல், பாரதி கண்ணம்மா சீரியல் புரோமோ, விஜய் டிவி, Barathi Kannamma serial poromo video, Barathi Kannamma, Roshni Haripriyan, Arun Prasad, Vijay TV, Barathi Kannamma story

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேர்வார்களோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் இருவரும் நெருங்கியதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் நல்ல குணமுள்ள கண்ணம்மாவை டாக்டரான பாரதி திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், பாரதியின் தோழி வெண்பா இவர்களை சதி செய்து பிரிக்கிறாள். பாரதி தனது மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு நிறைமாத கர்ப்பிணி என்று பாராமல் வீட்டை விட்டு விரட்டுகிறான். கண்ணம்மாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு பெண் குழந்தையை பாரதியின் அம்மா சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு தெரியாமல் எடுத்துச் சென்று ஹேமா என்று பெயர்வைத்து வளர்க்கிறார். ஆனால், கண்ணம்மா தனக்கு ஒரே குழந்தைதான் பிறந்தது என்று லக்ஷ்மி என்று பெயர் வைத்து வளர்கிறாள். 8 ஆண்டுகள் கடந்துவிடுகிறது.

பாரதி ஹேமா மீது பாசமாக வளர்ப்பு மகளாக வளர்க்கிறான். ஹேமாவும் லக்ஷ்மியும் ஒரே பள்ளியில் படிப்பதன் மூலம் தோழியாகிறார்கள். பள்ளியில் கண்ணம்மா சமையல் வேலை செய்வதன் மூலம் ஹேமாவுக்கும் கண்ணமாவுக்கு ஒரு பிணைப்பு ஏற்படுகிறது.

இடையில், வெண்பா, ஹேமாவை ஆள் வைத்து கடத்தியபோது கண்ணம்மாதான் கடத்தினாள் என்று பாரதி புகார் அளிக்கிறான். ஆனா, கண்ணம்மாதான் ஹேமாவை காப்பாற்றுகிறாள்.

அதன் பிறகு, ஹேமா கண்ணம்மா வீட்டில் தங்க விரும்புவதாகக் கூறி கண்ணம்மா வீட்டில் தங்குகிறாள். பாரதி மகள் ஹேமாவைப் பார்க்க முடியாமல் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறான். அந்த பகுதி கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதி என்பதால் பாரதி அங்கே இருந்து போக முடியாத சூழல் நிலவுவதால் கண்ணம்மாவின் வீட்டிலேயே தங்குகிறான்.

இப்படி சுவாரஸ்யமான உணர்ச்சி மிகுந்த திருப்பங்களால் பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பியில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் பல எபிசோடுகளாக பிரிந்தே இருப்பதால், இருவரும் எப்போது சேர்வார்கள், வெண்பாவை எப்போது விரட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்தான், பாரதி கண்ணம்மா சீரியலின் அழகிய புரொமோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த புரோமோவில் கண்ணம்மாவின் வீட்டில் இருக்கிற பாரதிக்கு வெந்நீர் வைத்து தருகிறாள். அவனுடைய உடைகளை துவைத்து தருகிறாள். அவனுக்கு தேவையான பணிவிடையை செய்கிறாள். ஹேமா, லக்ஷ்மிக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லித் தருகிறாள். இதன் மூலம் பாரதியும் கண்ணம்மாவும் நெருங்கிவிட்டார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து இந்த புரோமோவை பகிர்ந்துவருவதால் வைரலாகிவருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

#Barathi Kannamma #Barathi Kannamma Serial #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment