New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathikannamma-hema-video.jpg)
Vijay TV Barathikannamma serial hema soundharya viral comedy video: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வைரல் வீடியோ; பாட்டி சௌந்தர்யாவை வச்சு காமெடி செய்யும் ஹேமா...
பாரதி கண்ணம்மா சீரியலின் ஹேமா குட்டி தனது பாட்டி சௌந்தர்யாவை கலாய்த்து வெளியிட்டு இருக்கும் காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடிக்கின்றனர். வில்லி வெண்பாவாக ஃபரினா நடிக்கிறார். பாரதியின் அம்மா சௌந்தர்யா கதாப்பாத்திரத்தில், ரூபா ஸ்ரீ நடிக்கிறார். பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகளாக லிசா ராஜ்குமார் மற்றும் ரக்ஷா ஷ்யாம் நடித்து வருகின்றனர்.
சீரியலில் காதலித்து திருமணம் செய்யும் கண்ணம்மாவை, அவள் கர்ப்பிணியாக இருக்கும்போது பிரிந்து விடுகிறான் பாரதி. கண்ணம்மாவுக்கு பிறக்கும் இரண்டு குழந்தைகளில் ஒன்று கண்ணம்மாவிடம், மற்றொன்று பாரதியிடம் வளரும்படி செய்கிறார்கள் பாட்டி சௌந்தர்யா. பாரதியின் மகளான ஹேமாவும், கண்ணம்மாவின் மகளான லட்சுமியும் நல்ல தோழிகளாகிறார்கள். ஹேமா அம்மா பாசத்திற்கு ஏங்கி உடல் நிலை சரியில்லாமல் போக, அவளுக்கு பிடித்த சமையல் அம்மாவான கண்ணம்மா வீட்டில் தங்க வைக்கிறான் பாரதி. ஹேமாவைப் பார்க்க வரும் பாரதி, கொரோனாவால் கண்ணம்மா வீட்டில் தங்கி விடுகிறான். அடுத்து என்ன நடக்கும் என்பது இனி வரும் எபிஷோடுகளில் தெரிய வரும்.
இந்த நிலையில், இதில் ஹேமாவாக நடிக்கும் லிசாவும், அவரது பாட்டியாக நடிக்கும் ரூபா ஸ்ரீயும், ஷூட்டிங்க்கு நடுவே செய்திருக்கும் காமெடி வீடியோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கவுண்டமணியின் காமெடி சீசனுக்கு இருவரும் நடித்திருப்பார்கள். அந்த வீடியோவில் பாட்டியை கலாய்க்கும் வகையில் காமெடி செய்திருப்பார் ஹேமா.
ஏற்கனவே சீரியல் தோழிகளான, ஹேமாவும் லட்சுமியும் வெளியிட்ட காமெடி வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது ஹேமா தனது பாட்டியுடன் வெளியிட்டுள்ள காமெடி வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.