விஜய் டிவி முக்கிய சீரியலில் நுழையும் நடிகர்… அவருக்கு பதில் இவராம்!

Vijay TV Barathikannamma serial muthu kumara swamy replace actor venkatesh: பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகர் வெங்கடேஷ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் முத்து குமார சுவாமி, சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாற்றப்பட்டுள்ளார். கண்ணம்மாவின் அப்பாவாக இனி முத்து குமார சுவாமி நடிக்கவுள்ளார்.

கண்ணம்மாவின் அப்பாவாக இதுவரை நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

வெங்கடேஷ் , இதற்கு முன் சரவணன் மீனாட்சி சீரியலில் அப்பா கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். நடிகர் வெங்கடேஷ், செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  பீட்சா, சூதுகவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மைனா படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது. செல்லமடி நீ எனக்கு சீரியலை தொடர்ந்து உறவுகள், சங்கமம், ஈரமான ரோஜாவே போன்ற பல்வேறு சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் சீரியல்களில் சிறப்பாக நடித்துவந்த வெங்கடேஷின் திடீர் மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.

பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெங்கடேஷூக்கு பதில் வேறு நடிகர் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் வெங்கடேஷூக்கு பதில் வேறு ஒரு நடிகர் மாற்றப்பட்டுள்ளார். அவரது பெயர் முத்து குமார சுவாமி. நேற்றைய எபிஷோடில், புது நடிகர் முத்து குமார சுவாமி அறிமுகம் செய்யப்பட்டார். இந்த முத்து குமார சுவாமி, வெங்கடேஷ் நடித்த மற்ற சீரியல்களிலும் அவருக்கு பதிலாக நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகர் வெங்கடேஷ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் முத்து குமார சுவாமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial muthu kumara swamy replace actor venkatesh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com