New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/bk-promo.jpg)
Vijay TV barathikannamma serial new promo: கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாரதி; கண்ணம்மாவின் பதில் என்ன? பாரதி கண்ணம்மா ப்ரோமோ
பாரதி அனுப்பிய பார்சலைப் பார்த்து கண்ணம்மா அதிர்ச்சியாகும் வகையில் வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ, கண்ணம்மா என்ன செய்யப்போகிறாள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது.
தற்போது சீரியலில், பாரதி ஹாஸ்பிட்டலுக்கு கண்ணம்மாவை அழைத்து வரும் லட்சுமி பாரதியிடம், அங்கிள் எங்க அம்மாவுக்கு திரும்பவும் உடம்பு சரியில்லை என்கிறாள். உடனே பாரதி உட்காருங்க சமையல் அம்மா என கண்ணம்மாவை உட்கார வைத்து பரிசோதிக்கிறான். பின்னர் உங்களுக்கு ஒண்ணுமில்லை என சில மாத்திரைகளை பரிந்துரைக்கிறான் பாரதி.
பின்னர் வீட்டுக்கு வரும் கண்ணம்மாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவளுக்கு வரும் பார்சலை பிரித்து பார்க்கும் கண்ணம்மா அதிர்ச்சியாகிறாள். அதில் பாரதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். இவரும் விவாகரத்து பெறுவதற்கான வக்கீல் நோட்டீஸ் அது. உடனே பாரதி ஹாஸ்பிட்டலில் கூறியதை நினைத்து பார்க்கும் கண்ணம்மா, பாரதி இதைத்தான் மறைமுக சொன்னாரா என அதிர்ச்சியாகிறாள்.
இவ்வாறு விஜய் டிவி, பாரதி கண்ணம்மா சீரியலுக்கான புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. பாரதி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்க்கு கண்ணம்மாவின் பதில் என்ன என்று தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.