பட்டுப்புடவையில் கண்ணம்மா; பக்கத்தில் பாரதி: கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ?!
Vijay TV barathikannamma serial new shooting spot video: பாரதியும், பட்டுப்புடவையில் கண்ணம்மாவும் ஒன்றாக நிற்கும் காட்சி; பாரதி கண்ணம்மா சீரியலின் புது வீடியோ...
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் உருவெடுத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவாக ரோஷினியும், பாரதியாக அருணும் நடித்து வருகின்றனர். வில்லி வெண்பாவாக ஃபரினாவும், மற்ற கதாப்பாத்திரங்களில், ஸ்வீட்டி, ரூபா ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சீரியல் ஒவ்வொரு நாளும் பரப்பரப்புடன், ஆர்வமூட்டுவதாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சீரியலில் தற்போது கண்ணம்மாவின் குழந்தை தான் லட்சுமி என பாரதிக்கு உண்மை தெரிய வருகிறது. இதனை நிரூபிக்க பாரதி திட்டமிடுவதாக சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு வளைகாப்பு நடக்கவுள்ளதாக தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். கண்ணம்மா பட்டுப்புடவையில் அழகாக இருக்கிறார். இதனால் பாரதியும் கண்ணம்மாவும் விரைவில் சேர உள்ளதாகவும், அஞ்சலிக்கு விரைவில் வளைகாப்பு நடக்கவுள்ளதாகவும் தெரிகிறது.