New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/bkp2.jpg)
Vijay TV barathikannamma serial promo update romance between barathi, kannamma: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் புதிய ப்ரோமா; மீண்டும் ரொமான்ஸ் செய்யும் பாரதியும் கண்ணம்மாவும்
பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரோமோ பாரதியும் கண்ணம்மாவும் மீண்டும் இணைவதற்கான அறிகுறிகளாக தெரிகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் உள்ளது. இதில் அருண், ரோஷினி, ஃபரினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சீரியலின் கதையைப் பொறுத்தவரை, கருப்பாக இருக்கும் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்கிறான் டாக்டர் பாரதி. கண்ணம்மாவை பாரதியின் அம்மா சௌந்தர்யா முதலில் ஏற்க மறுத்தாலும், பின்னர் கண்ணம்மாவின் நல்ல குணங்களால் அவளை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கையில் வில்லியாக வருகிறாள் வெண்பா. வெண்பா பாரதியை ஒரு தலையாக காதலித்து வருகிறாள். வெண்பாவின் சதியால், பாரதியும் கண்ணம்மாவும் பிரிகிறார்கள்.
கர்ப்பமான நிலையில் பாரதியை பிரிந்து செல்லும் கண்ணம்மா இரு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். அதில் ஒரு குழந்தையான ஹேமாவை சௌந்தர்யா எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறாள். இன்னொரு குழந்தை லட்சுமி கண்ணம்மாவிடம் வளர்கிறது. பின்னர் இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அக்கா தங்கை என தெரியாமலே இருவரும் தோழிகள் ஆகின்றனர். அதே பள்ளியில் சமையல் அம்மாவாக வேலை பார்க்கும் கண்ணம்மாவின் அன்பில், அவளிடம் நெருக்கமாகிறாள் ஹேமா. கண்ணம்மாவுக்கு இவள் தன் மகள் என்று தெரியாது.
கண்ணம்மாவும் ஹேமாவும் நெருங்கி பழகுவதைப் பிடிக்காத பாரதி, ஹேமாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல விரும்புகிறான். ஆனால் அமெரிக்கா கிளம்பும்போது ஹேமாவுக்கு வலிப்பு வந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். டாக்டர் பிரியா, ஹேமா சமையல் அம்மா கூட ஒரு வாரம் இருந்தால் தான் குணமாவாள் என்று சொல்ல, வேண்டா வெறுப்பாக கண்ணம்மா வீட்டில் கொண்டு போய் ஹேமாவை விடுகிறான் பாரதி. ஹேமாவுக்காக அங்கு ஏசி அனுப்ப அதை திருப்பி அனுப்புகிறாள் கண்ணம்மா.
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹேமாவுடன் வீடியோ காலில் பேசுகிறான். அப்போது ஹேமாவின் பின்னால் உட்கார்ந்து இருக்கிறாள் கண்ணம்மா. அவளை அவ்வப்போது பார்க்கிறான் பாரதி. பின்னர் ஐ லவ் யூ என்று சொல்கிறான் பாரதி. அடுத்து பாரதி செல்லும் காரை பின் தொடர்கிறாள் சௌந்தர்யா. பாரதி பூச்செடியுடன் கண்ணம்மா வீட்டுக்கு செல்கிறான். கண்ணம்மாவும் பாரதியும் பூச்செடியை நடும்போது இருவர் கைகளும் தொட்டுக்கொள்கின்றன. பின்னர், கண்ணம்மா வீட்டில் சாப்பிடுகிறான் பாரதி. இதையெல்லாம் மறைந்து இருந்து பார்த்து சந்தோஷப்படுகிறாள் சௌந்தர்யா.
இவ்வாறு ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் அவர்கள் மீதான காதல் இன்னும் இருக்கிறதும், விரைவில் அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிகிறது. பாரதிக்கும் கண்ணம்மாவுக்குமான இந்த காதல் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.