Advertisment

Bharathi Kannamma Serial: அம்மாடி... வெண்பா இவ்ளோ கொடூர வில்லியா? வேலைக்காரிக்கு செம்ம அடி விழும் போல!

Vijay TV Barathikannamma serial shooting spot video venba hits shanthi: விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங் ஸ்பாட் வீடியோ; சாந்தியை வெளுத்து வாங்கும் வெண்பா...

author-image
WebDesk
New Update
Bharathi Kannamma Serial: அம்மாடி... வெண்பா இவ்ளோ கொடூர வில்லியா? வேலைக்காரிக்கு செம்ம அடி விழும் போல!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா, சாந்தியை அடிக்கும் சூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கருப்பான பெண்ணை திருமணம் செய்யும் ஹீரோ, ஹீரோவை ஒருதலையாக காதலிக்கும் வில்லியால் அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு என சுவாஸ்ரயமாக செல்லும் திரைக்கதை ரசிகர்களை வசப்படுத்தியுள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங்கிலும் பாரதி கண்ணம்மா சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஹீரோ, ஹீரோயினுக்கு நிகராக வில்லி கதாப்பாத்திரமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாரதியாக அருணும், கண்ணம்மாவாக ரோஷினியும் நடிக்க, வில்லி வெண்பாவாக ஃபரினா அதகளம் செய்துக் கொண்டிருக்கிறார். பாரதியை அடைவதற்காக, அவர் போடும் திட்டங்கள் சீரியலை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறது.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தனது வீட்டில் வேலை செய்யும் சாந்தியை வெண்பா கட்டிப்போட்டு அடிப்பதாக உள்ளது. மேலும் வெண்பா அடித்ததில் கட்டை வளைந்து விட்டதால் வேறு கட்டையை எடுத்து வருகிறார்கள். சேரில் அடிக்காமல், சரியாக சாந்தியை அடிக்குமாறு வெண்பாவிடம் கூறுகின்றனர் படக்குழுவினர். வலிக்குதா என வெண்பா கேட்க, நல்லா வலிக்குது என்கிறார் சாந்தி. ஆனால் படக்குழுவினரோ, சேரில் தான் அடிச்சீங்க, சாந்தியை நல்ல அடிங்க என்று சொல்கின்றனர்.

எப்போதும், வெண்பாவுக்கும் உதவி செய்தும் வரும் சாந்தியை வெண்பா கட்டி வைத்து அடிப்பது, ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, கதை இனி எப்படி போகுமோ என ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Farina Azad Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment