Bharathi Kannamma Serial: U டர்ன் போடும் பாரதி… வெண்பாவின் அடுத்த பிளான் என்ன?

Vijay TV barathikannamma serial today episode akil anjali visit temple: கண்ணம்மா பக்கம் நியாயம் இருப்பதாக நினைக்கும் பாரதி, அஞ்சலிக்காக பரிகாரம் செய்யும் அகில், இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

அம்மாவை பற்றிக் கேட்கும் ஹேமாவை போனில் ஆறுதல்படுத்துகிறான் பாரதி. பின்னர் அங்கிருக்கும் நோயாளியின் உறவினரிடம், உங்க அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக், நிறைய டென்ஷன் ஆவாரா என பாரதி கேட்கிறான். அதற்கு அவர், அவனுக்கு எப்ப சந்தேகப்புத்தி வந்துச்சோ அப்போதிலிருந்து அவனுக்கு டென்ஷன் அதிகமாச்சு என்கிறாள். உடனே யாருமேல் சந்தேகம் என பாரதி கேட்க, அவர் மனைவி மேல் தான் அவனுக்கு சந்தேகம், அதுவும் அவங்க காதலித்து திருமணம் செய்தவங்க, நல்ல ஜோடியா இருந்தாங்க, ஆனா அண்ணி கர்ப்பமானதிலிருந்து அண்ணனுக்கு சந்தேகம் வந்திடுச்சு, அண்ணியை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான், ஆனால் எங்க அண்ணி தங்கமானவங்க, குழந்தை பிறந்த பின்னரும் அவனுக்கு சந்தேகம் தீரல, அது என் குழந்தை இல்லைனு சொல்றான் என அப்படியே பாரதியின் வாழ்வில் நடந்ததை, அவள் அண்ணனுக்கு நடந்ததாக கூற அதிர்ச்சியாகிறான் பாரதி.

பின்னர் பாரதி, உங்க அண்ணன் காரணம் இல்லாமல் சந்தேகபடுறார்னு நினைக்குறீங்களா என கேட்க, ஆமா வீண் சந்தேகம், எங்க குடும்பமே எங்க அண்ணி பக்கம், அவன் வாழ்க்கையே நரகமாயிடுச்சு என சொல்ல தனக்கு நடந்தையெல்லாம் நினைத்து பார்க்கிறான். பின்னர் அந்த உறவினர், எங்க அண்ணனுக்கு கவுன்சிலிங் கொடுங்க என சொல்ல, திணறுகிறான் பாரதி. பின்னர் நடந்ததைப் பத்தி பாரதி நினைத்து பார்த்து, யார் பக்கம் தப்பு இருக்குனு யோசிக்கிறான்.

அடுத்ததாக, கோவிலுக்கு பரிகாரம் செய்ய வருகிறார் அஞ்சலியும் அகிலும். அங்கும் அகில் பரிகாரம் செய்ய தயங்க, கோபமாகிறாள் அஞ்சலி. பின்னர் பூசாரியிடம் அஞ்சலி பரிகாரம் பற்றி சொல்ல, அவர் குளவிக்கல்லை கழுத்தில் சுமந்து முழங்காலிட்டு கோவிலை சுற்றி வரவேண்டும் என சொல்கிறார். உடனே அகில் வேண்டாம் என தடுக்கிறான். ஆனால், அஞ்சலி பிடிவாதமாக இருக்க, நான் செய்கிறேன் என அகில் பரிகாரம் செய்கிறான். 

அடுத்ததாக, கண்ணம்மா தங்கமாவ என சௌந்தர்யா, வேணு சொன்னதை நினைத்து, கண்ணம்மாவ நான் தான் தப்பா நினைக்கிறேனா என யோசிக்கிறான் பாரதி. அப்போது அங்கு வரும் வெண்பா, என்ன விஷயம் என கேட்க, கண்ணம்மாவ நான் தான் தப்பா நினைக்கிறேனா என சொல்ல, அதிர்ச்சியாகிறாள் வெண்பா. எங்க வீட்டில் எல்லாரும் கண்ணம்மா பக்கம் இருக்காங்கனா, அவ பக்கம் ஏதோ நியாயம் இருக்கு, நான் ஏதாவது தப்பு செஞ்சிருக்கலாம் என பாரதி சொல்ல, டென்ஷனாகும் வெண்பா ஏதாவது செய்து பாரதியை மாற்ற வேண்டும் என நினைக்கிறாள். மேலும் பாரதி, கண்ணம்மா என்னைவிட்டு போய் கஷ்டப்பட்டு திரும்ப காலில் வந்து விழுவாள்னு நினைச்சேன், ஆனால் அவ சுயமரியாதையோடு வாழ்ந்து காட்டுறா, தப்பு பண்ணுனவ இப்படி இருக்க மாட்டா, கண்ணம்மாகிட்ட பயமோ குற்றவுணர்ச்சியோ இல்லை, நேருக்கு நேரா பேசுவா, அதனால், கண்ணம்மாவ நான் தான் தப்பா நினைச்சிட்டு இருக்கேன், இந்த 8 வருஷத்தில் எனக்கு எதுவுமே நல்லது நடக்கல, நல்ல வாழ்க்கை வாழல, எங்க வீட்டில் எல்லாரும் நான் கண்ணம்மா கூட சேர்ந்து ஆசைப்படுறாங்க, ஆனா நான் அவங்கள மதிக்காம இருக்கேன். கண்ணம்மாவ பிடிக்காத அவங்க சித்தி கூட கண்ணம்மாவ நம்புறாங்க என்று சொல்ல, பாரதியை எப்படி மாற்றலாம் என யோசிக்கிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial today episode akil anjali visit temple

Next Story
பாரதி கண்ணம்மா இனி இரவு 9 மணிக்கு கிடையாதா? முக்கிய சீரியல்களை பாதிக்கும் பிக் பாஸ் தமிழ் 5
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X