Advertisment

Vijay TV Serial; ஹேமாவை கடத்தியது கண்ணம்மாதான்… பிடிவாதமாக சொல்லும் பாரதி

Vijay TV Barathikannamma serial today episode barathi accuses kannamma: ஹேமா கிடைத்த சந்தோஷத்தில் கண்ணம்மா, கண்ணம்மா மீது குற்றம் சுமத்தும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
Jun 30, 2021 14:15 IST
New Update
Vijay TV Serial; ஹேமாவை கடத்தியது கண்ணம்மாதான்… பிடிவாதமாக சொல்லும் பாரதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

மயக்கமான ஹேமாவை ஹாஸ்பிட்டலில் சேர்க்கிறாள் கண்ணம்மா. கண்ணம்மாவின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டுபோட்டு விடுகிறார் நர்ஸ். பின்னர் கார் டிரைவரிடம், ஹேமா எப்படி டிக்கிக்குள் வந்தாள் என கண்ணம்மா கேட்க, தெரியல ரவுடிகள் துரத்தியதால் என்னோட கார் டிக்கியில் ஒளிந்திருக்கலாம் என பதிலளிக்கிறார் கார் டிரைவர்.

பின்னர் கண்ணம்மாவின் அப்பா, ஹேமா கிடைத்த விஷயத்தை சௌந்தர்யாவிடம் சொல்ல சொல்கிறார். சௌந்தர்யாவிடம், ஹேமா கிடைத்ததை கண்ணம்மா சொல்ல, எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். பின்னர் ஹேமாவுக்கு மூச்சு விடுவது கஷ்டமா இருந்ததால ஹாஸ்பிட்டலில் சேர்த்திருப்பதாக சொல்லி, சௌந்தர்யாவை வரச் சொல்கிறாள்.

publive-image

டாக்டர், ஹேமாவுக்கு சில டெஸ்ட்களை எடுக்க சொல்கிறார். ஹேமாவை நினைத்து கண்ணம்மா அழுதுக்கொண்டே இருக்கிறாள். அப்போது கண்ணம்மாவின் அப்பா, பாரதி உன்ன வீட்டவிட்டு துரத்திட்டான், ஆனா நீ அவன் குழுந்தைய தேடி கண்டுபிடிச்சிருக்க, பாரதி வரட்டும், அவன்கிட்ட நா கேள்வி கேட்கனும் என கோபமாக சொல்கிறார். என்ன கேட்க போறீங்க என கண்ணம்மா கேட்க, அதற்கு அப்பா, உன் மேல கம்ப்ளைண்ட் கொடுத்தத பத்தி கேட்க போறேன் என்கிறார். கண்ணம்மா அதெல்லாம் வேணாம், ஹேமா கண் முழிச்சதும் பார்த்துட்டு போயிருவோம் என்கிறாள்.

அப்போது, அங்கு வருகிறார்கள் சௌந்தர்யாவும் வேணுவும். கண்ணம்மாவுக்கு அடிப்பட்டதையும், ஹேமாவை பற்றியும் சௌந்தர்யா கேட்க, ஒண்ணும் பிரச்சனை இல்லைனு டாக்டர் சொன்னதாக கண்ணம்மா சொல்கிறாள். ஹேமா உன்கிட்ட பேசுனாளா என சௌந்தர்யா கேட்க, இல்லை, அவளுக்கு வலிப்பு வந்ததாக சொல்கிறாள் கண்ணம்மா. இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் சௌந்தர்யாவுக்கு ஆறுதல் சொல்கிறாள் கண்ணம்மா.

அடுத்து பாரதிக்கு போன் செய்து, ஹேமா கிடைத்தை சொல்வதாக வேணு சொல்ல, நானே சொல்கிறேன் என சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்கிறாள். பாரதியிடம் ஹேமா கிடைத்த விஷயத்தை கூறி வரச் சொல்கிறாள். பாரதி வெண்பாவிடம், ஹேமா கிடைச்சிட்டா என கூற, ஷாக்காகிறாள் வெண்பா. நீ ஏன் ஷாக் ஆகுற என பாரதி கேட்க, இல்லை ஹேமா கிடைச்சது சந்தோஷம் தான் என சமாளிக்கிறாள். பின்னர் இருவரும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புகிறார்கள்.

அடுத்ததாக, கண்ணம்மாவிடம் ஹேமா எப்படி கிடைச்சா என வேணு கேட்க, கண்ணம்மா ஹேமாவை தேடி அலைந்ததையும், காருக்குள் சத்தம் கேட்க டிக்கியை திறந்து பார்த்தப்ப அதில் ஹேமா இருந்ததாகவும், ரவுடிகளும் ஹேமாவை தேடியதாகவும், ரவுடிகள் கண்ணம்மாவை அடித்துவிட்டு ஹேமாவை கடத்த முயன்றதாகவும், பக்கத்திலுள்ள ஹாஸ்டல் பெண்கள் காப்பாற்றியதாகவும் கண்ணம்மாவின் அப்பா சொல்ல, அதிர்ச்சியாகிறார்கள் சௌந்தர்யாவும் வேணும்.

publive-image

அப்போது அங்கு வரும் பாரதி, கண்ணம்மா நல்ல நடிப்பதாக கூறுகிறான். சௌந்தர்யா கண்ணம்மா தான் ஹேமாவ கண்டுபிடிச்சா என சொல்ல, அது எப்படி இவ கண்டுபிடிச்சா என கண்ணம்மா மீது சந்தேகப்படுகிறான் பாரதி. வெண்பாவும், நாம இவ்வளவு பேர் தேடியும் கிடைக்காதவ, எப்படி கண்ணம்மாகிட்ட கிடைச்சா என பாரதியிடம் பத்த வைக்கிறாள். சௌந்தர்யா பாரதியை சமாதானம் செய்ய முயல, போலீசில் கண்ணம்மா மீது கம்ப்ளைண்ட் கொடுத்ததில் எந்த மாற்றமும் இல்லை, ஹேமாவ கடத்துனது கண்ணம்மா தான்  என அதிர்ச்சி அளிக்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Tv #Barathi Kannamma Serial #Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment