New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/barathikannamma-jul-20-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode barathi change of mind: அமெரிக்கா போகும் முடிவை கைவிடும் பாரதி, கண்ணம்மா இடத்துக்கு வர தூண்டில் போடும் வெண்பா இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹேமா கண் விழித்ததும் சமையல் அம்மா என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, ஆச்சரியப்படுகிறான் பாரதி. அப்போது கண்ணம்மா நான் உன்கூடவே இருப்பேன் என ஆறுதல் சொல்கிறாள். அடுத்து ஹேமாவோட பிரச்சனைக்கு மருந்து சமையல் அம்மா தான் என பாரதியிடம் சொல்கிறார் டாக்டர் பிரியா. பின்னர் டாக்டர் ஹேமாவை ஜூஸ் குடிக்க சொல்ல, சமையல் அம்மாவை கொடுக்க சொல்கிறாள் ஹேமா.
அடுத்து ஹேமா எனக்கு அமெரிக்கா போக பிடிக்கலை என கண்ணம்மாவிடம் சொல்ல, உன் விருப்பம் இல்லாம யாரும் கூட்டிட்டு போக முடியாது என ஆறுதல் சொல்கிறாள். அப்போது, அப்பா யாரும் சொல்லியும் கேட்கல, அதனால நீங்க ஒரு தடவை சொல்லுங்க என சமையல் அம்மாவிடம் சொல்கிறாள் ஹேமா. இதையெல்லாம் பார்த்து வெறுப்பாகிறாள் வெண்பா. பின்னர் எல்லோரும், அமெரிக்கா போக வேண்டாம் என பாரதியிடம் கெஞ்சுகின்றனர்.
பின்னர், உனக்காக எதையும் செய்வேன் என சொல்லும் பாரதி, நாம அமெரிக்கா போகப்போறதில்லை என சொல்கிறான். இதைக்கேட்டு எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள். அடுத்து பாரதி ஹேமா முன்னாடியே, அமெரிக்காவுக்கான டிக்கெட்டை கிழித்து போடுகிறான்.
அடுத்ததாக, ஹேமா கண்ணம்மாவை அம்மாவா நினைச்சு, அவளோட பாசத்துக்கு ஏங்குற என சொல்கிறாள் சௌந்தர்யா. மேலும், ஹேமா கடத்தப்பட்டப்போது கூட அவளை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு கொடுத்திருக்கா கண்ணம்மா அவள தப்பா நினைக்காத, ஹேமாவுக்காக நீ எல்லாத்தையும் விட்டுகொடுக்கனும் என்றும் சொல்கிறாள்,
அடுத்து சௌந்தர்யா போன பின்னர் பாரதியிடம் வரும் வெண்பா, ஹேமாவுக்கு தான் சரியாயிடுச்சே என சொல்ல, ஆனா ஹேமா கண்ணம்மா பக்கம் மொத்தமா போயிட்டாளே என வருத்தப்படுகிறான் பாரதி. கண்ணம்மா ஏதோ பண்ணி ஹேமாவ மாத்தி வச்சிருக்கா என சந்தேகப்படுகிறான் பாரதி. ஹேமா சின்னக்குழந்தை அவ அம்மா பாசத்துக்கு ஏங்குறா, அத கண்ணம்மா பயன்படுத்திக்கிட்ட என வெண்பா சொல்ல, இதையெல்லாம் ஏன் பண்ணனும் என கேட்கிறான் பாரதி. அதற்கு வெண்பா, உன்ன பழிவாங்க தான் கண்ணம்மா இப்படி செய்யுற என பாரதியை தூண்டுகிறாள். கண்ணம்மாவ ஏன் இங்க கூட்டிவந்த என வெண்பா கேட்க, ஹேமாவுக்காக செஞ்சேன் என சொல்கிறான். ஹேமா அம்மா பாசத்துக்கு ஏங்குற, கண்ணம்மாகிட்ட போகாம தடுக்க நீ வேற ஏதாவது செய்யனும் என தூண்டில் போடுகிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.