Advertisment
Presenting Partner
Desktop GIF

Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் லட்சுமி எப்படி? சந்தேகப்படும் பாரதி… சமாளித்த ஹேமா

Vijay TV barathikannamma serial today episode barathi doubts lakshmi: அஞ்சலியையும் அகிலையும் சமாதானம் செய்து வைக்கும் சௌந்தர்யா, கண்ணம்மா வீட்டில் லட்சுமியைப் பார்த்து சந்தேகப்படும் பாரதி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் லட்சுமி எப்படி? சந்தேகப்படும் பாரதி… சமாளித்த ஹேமா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

உங்க அப்பாவ ஏன் உனக்கு ரொம்ப பிடிக்கும் என கண்ணம்மா கேட்க, அப்பா நிறைய பேருக்கு உதவியிருக்காரு அதனால எனக்கு அவர ரொம்ப பிடிக்கும் என சொல்கிறாள் ஹேமா. பின்னர் எங்க அப்பா குடிக்கிறது தான் எனக்கு பிடிக்காது என்கிறாள் ஹேமா. இதையெல்லாம் மறைந்திருந்து கேட்கிறாள் லட்சுமி. அதன்பின் ஹேமா கிளம்பியதும், லட்சுமி கண்ணம்மாவிடம் வந்து என்னோட அப்பா எங்க இருக்காரு என கேட்கிறாள். கண்ணம்மா எதுவும் சொல்ல முடியாமல் தவிக்க, அப்பா பத்தி கேட்ட மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிற, அப்பானு ஒருத்தர் இருக்காரா இல்லயா என கேட்கிறாள் லட்சுமி. உங்க அப்பா கண்டிப்பா ஒரு நாள் வருவார் என சமாளிக்கிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்து, அஞ்சலியைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொள்ளும் அகிலை சமாதானம் செய்கிறாள். அப்போது அங்கு வரும் சௌந்தர்யாவிடம், அகில் என்கிட்ட பேச மாட்டேங்குறாரு என அஞ்சலி சொல்ல, என்ன பிரச்சனைனு நீயே சொல்லு என அதட்டுகிறான் அகில். பிரச்சனை எதுவா இருந்தாலும், அவ கர்ப்பமா இருக்கும்போது நீதான் விட்டுக்கொடுத்து போகனும் என அகிலுக்கு அட்வைஸ் செய்கிறாள் சௌந்தர்யா. குழந்தை பிறக்க வரை பெண்களுக்கு நிறைய கஷ்டம் இருக்கும், அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டியதில்லை, அஞ்சலிய சந்தோஷமா வச்சுக்க என இருவருக்கும் சமாதானம் செய்துவைக்கிறாள் சௌந்தர்யா.

publive-image

ஏசி எப்படி போடுவது என லட்சுமிக்கு சொல்லி கொடுக்கிறாள் ஹேமா. அப்போது உங்க வீட்டில் ஏசி இல்லயா என ஹேமா கேட்க, நீ தான் பார்க்குறல்ல இங்க ஏசி இல்ல என சொல்கிறாள். உடனே ஹேமா சமையல் அம்மா வீட்ல கேட்கல, உங்க வீட்ல கேட்கிறேன் என கேட்க, எங்க வீட்லயும் இல்லை என சமாளிக்கிறாள் லட்சுமி. பின்னர், ஏசியில் குளிர் அதிகமா வர குறைச்சு வைக்கனும் என ஹேமா சொல்வதை நம்ப மறுத்து சண்டையிடுகிறாள் லட்சுமி. அப்போது அங்கு வரும் பாரதி, இருவரையும் சமாதானம் செய்கிறான். அதன்பின் லட்சுமியிடம், நீ எப்படி இங்க இருக்க என பாரதி கேட்க, ஹேமா அவங்க அம்மா ஊருக்கு போயிருக்கதால சமையல் அம்மா வீட்ல இருக்க என சொல்கிறாள். பின்னர் லட்சுமிக்கு ஏசி பற்றி விளக்கமளிக்கிறான் பாரதி. இதைக்கேட்டு தெளிவாகிறாள் லட்சுமி.

publive-image

அப்போது அங்கு வரும் கண்ணம்மா, பாரதியை பார்த்து அதிர்ச்சியாகிறாள். லட்சுமி இங்க இருப்பதைப் பார்த்து டாடிக்கு ஒரே ஆச்சரியம் என ஹேமா சொல்ல, பதற்றமாகிறாள் கண்ணம்மா. பின்னர் ஹேமா அவங்க அம்மா ஊருக்கு போயிருக்கதால, அவ இங்க இருக்கானு சொன்னேன் என சொல்ல, இயல்பாகிறாள் கண்ணம்மா. பின்னர் பாரதி, ஹேமாவிடம் வீட்டுக்கு போவோமா என கேட்க, எல்லோரும் வருத்தமாகிறார்கள். ஹேமா 2 நாள் இருந்துட்டு வர்றேன் என கெஞ்ச, சரி என சொல்கிறான் பாரதி. அடுத்து பாரதி ஹேமாவுக்கு ஹெல்த் செக் அப் செய்கிறான். ஹேமா நல்லா இருக்கா என கண்ணம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment