கண்ணம்மா என் மனைவி… வெண்பாவை மிரளவைத்த பாரதி… லேட்டஸ்ட் திருப்பம்!

Vijay TV barathikannamma serial today episode Barathi gives shock to venba: ஹேமாவ நேரம் வரும்போது கூட்டிட்டு போவேன் என சொல்லும் கண்ணம்மா, கண்ணம்மா என பொண்டாட்டி தான், நீ இதுல தலையிடாத என வெண்பாவிடம் சொல்லும் பாரதி, இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

ஹேமாவுக்கு கண்ணம்மா சாப்பாடு ஊட்டிவிடுவதை பார்க்கும் பாரதி, எதுவும் சொல்ல முடியாமல் நிற்க, ஹேமா பாரதியையும் சாப்பிட அழைத்து செல்கிறாள். பாரதி சாப்பிட மறுக்க கண்ணம்மா சாப்பிட சொல்கிறாள். அப்போது அங்கு வரும் வெண்பா, இந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். அப்போது கண்ணம்மா பாரதியை ஏங்க, என கணவனை அழைப்பதுப்போல் அழைத்து வெண்பாவை கூப்பிடச் சொல்கிறாள். வீட்டில் உள்ள மற்ற எல்லோரும் இதைப்பார்த்து நக்கலாகச் சிரிக்கிறார்கள். எதுவும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறான் பாரதி.

அப்போது சௌந்தர்யா, வெண்பாவிடம் எதுக்கு வந்த என கேட்க, அவள் தயங்க, பாரதி அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறான். பின்னர் ஹேமா ஸ்கூலுக்கு கிளம்ப, பாரதியோட மாற்றத்துக்கு காரணம் என்ன என கேட்க, எல்லாம் ஹேமா மேல் உள்ள பாசம் என்கிறாள். பின்னர் கண்ணம்மா ஹேமாவ அழைச்சிட்டு போகமாட்டேன், ஹேமா அவ அப்பா கூட இருக்கட்டும் என்கிறாள். மேலும், இதைக்கேட்டு எல்லோரும் சந்தோஷப்பட, நேரம் வரும் போது ஹேமாவ கூட்டிட்டு போயிடுவேன் என்கிறாள்.

அடுத்தாக, பாரதியிடம் பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி அவனை தூண்டிவிடுகிறாள் வெண்பா. பின்னர் பாரதி நடந்ததைச் சொல்ல, நம்பாமல் நீ மாறிட்ட என்கிறாள். அதற்கு உன்னோட லிமிட் அவ்வளவு தான் என பாரதி சொல்ல, அவள உங்க வீட்டுக்கு நீ தான் வர சொன்னியா என கேட்கிறாள் வெண்பா. கோபமாகும் பாரதி, ஓவரா பேசாத, நீயும் நானும் எப்பவும் ஒண்ணா சுத்துறமே, ஆனா இதப் பத்தி கண்ணம்மா ஒரு நாள் கூட என்கிட்ட கேட்டதில்ல, கட்டுன பொண்டாட்டி அவளே என்னை எதுவும் கேக்காதபோ நீ என்ன இவ்வளவு கேள்வி கேக்குற, உனக்கு யாரு அந்த உரிமைய குடுத்தா என்கிறான். என் வாழ்க்கைய பத்தி யோசிக்காம உனக்காக இருந்தேன், ஆனா உனக்கு நான் இப்ப தேவையில்லை என வெண்பா சொல்ல, இத பத்தி பேச வேண்டாம் என்கிறான் பாரதி. கண்ணம்மா பத்தி பேசுன உனக்கு பிடிக்கல, அவ உன் மனசுக்குள்ள வந்துட்டா, உனக்கு துரோகம் பண்ணவளே மன்னிக்கிற பெரிய மனசு உன்கிட்ட இருக்கு என்கிறாள் வெண்பா. ஒன்னுமே நடக்காதபோது, நீ ஏன் பெரிசு பண்ற, கண்ணம்மா இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிட்டது இல்ல, இது என்னோட பிரச்சனை இத கேக்க யாருக்கும் உரிமையில்லை என்கிறான் பாரதி.

உடனே வெண்பா, நான் யாரோ தான், ஆனா அந்த கண்ணம்மா எவன் கூட போய் புள்ள பெத்துக்கிட்டாலும் உன் பொண்டாட்டி தானே என சொல்ல, ஆமா கண்ணம்மா என் பொண்டாட்டி தான் அதுக்கு என்ன இப்ப என கத்திச் சொல்கிறான் பாரதி. அதிர்ச்சியாகும் வெண்பாவிடம், நான் கட்டுன தாலி அவ கழுத்துல இருக்குற வரைக்கும் அவ என் பொண்டாட்டி தான், சட்டமும் அத தான் சொல்லுது என சொல்ல, நீ இப்ப சொல்லுவேனு நினைச்சேன் என வெண்பா சொல்ல, அவ தப்பு செஞ்சதால் பிரிஞ்சு வாழ்றேன், ஆனா நடந்த எதையும் மாத்த முடியாது, அவள என்னைக்கும் நான் ஏத்துக்க மாட்டேன், ஆனா இது எங்களோட பிரச்சனை, இதுக்கல்ல மூணாவது மனுசன் வர்றத நான் விரும்பல என்கிறான் பாரதி. வெண்பா அதிர்ச்சியாக உனக்கு புரிஞ்சிடுச்சா என பாரதி கேட்க, அதான் செருப்பால் அடிச்ச மாதிரி சொல்லிட்டியே என கோபமாக கிளம்புகிறாள்.

அடுத்ததாக கண்ணம்மா தனது வீட்டில் அங்கு நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். மேலும் எல்லா பிரச்சனையும் முடிஞ்சு, ஹேமாவும் லட்சுமியும் எங்கள அம்மா அப்பானு கூப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும் என சந்தோஷப்படுகிறாள். அங்கு வரும் குமார் என்ன விஷயம் என கேட்க, மனசு நல்லா இருக்கு என்கிறாள்.

அடுத்ததாக ஹேமாவுடன் வெளியே செல்லும் பாரதியை, ஹேமா ஷாப்பிங் கூப்பிட எனக்கு வேலை இருக்கு முடிஞ்ச வரைக்கும் வர பார்க்குறேன் என சமாளிக்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial today episode barathi gives shock to venba

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com