விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
பாரதி கோபமாக பேசியதை நினைத்து வருத்தமாக இருக்கிறாள் லட்சுமி. செளந்தர்யா வந்து லட்சுமியை சாப்பிட கூப்பிட, பசிக்கல என மறுக்கிறாள். சௌந்தர்யா என்ன ஆச்சு என கேட்க, பாரதி அங்கிள் திட்டுனாரு என சொல்கிறாள். இதைக்கேட்டு சௌந்தர்யா வருத்தப்பட, சமையல் அம்மா வீட்டில் என்னை விட்டுருங்க என கெஞ்சுகிறாள் லட்சுமி. உடம்பு சரியானதும் போகலாம் என சமாளிக்கிறாள் சௌந்தர்யா. லட்சுமி சாப்பிட போனதும், அங்கு வரும் பாரதியிடம், லட்சுமிக்கிட்ட இப்படி தான் நடந்துக்குவியா என திட்டுகிறாள் சௌந்தர்யா. இல்லை, டென்ஷனில் திட்டிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க என சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி.
அடுத்து, கண்ணம்மா சூப்பரா சமையல் செய்வது எப்படி என ஹேமா கேட்க, எங்க அம்மா, நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாங்க, அப்போதிலிருந்து சமைச்சு பழகிட்டேன் என்கிறாள். பின்னர் லட்சுமியை நினைத்து கவலையாகிறாள் கண்ணம்மா. அதோடு பாரதி ஏன் இப்படி செய்யனும் என யோசிக்கிறாள் கண்ணம்மா. அப்போது அங்கு வரும் பாரதியைப் பார்த்ததும், லட்சுமியை தேடுகிறாள் கண்ணம்மா. ஆனால் பாரதியோ கூலாக, ஹேமாவை கொஞ்சிக் கொண்டிருக்கிறான். லட்சுமி வராததை நினைத்து கவலைப்படும் கண்ணம்மா, பாரதியிடம் நேரடியாக கேட்க முடியாமல் தவிக்கிறாள். பாரதியிடம் லட்சுமி எங்க என கண்ணம்மா கேட்க, அது கேட்காதது மாதிரி அவாய்ட் பண்றான் பாரதி. கண்ணம்மா, லட்சுமி எங்க என கோபமாக கேட்க, அதான் வீட்டில் எல்லாம் பேசியாச்சே என்று சொல்கிறான். அப்போது ஹேமாவை வீட்டுக்கு அழைக்க, அவ இன்னும் 4 நாள் இருந்து விட்டு வருவதாக சொல்கிறாள். கண்ணம்மா, லட்சுமியை பத்தி மீண்டும் மீண்டும் கேட்க, அதை காதில் வாங்காமல் ஹேமாவை தூங்க வைக்கிறான் பாரதி.
பின்னர் ஹேமா, தூங்கியதும் வெளியில் வரும் பாரதியிடம் கோபமாக கேட்கிறாள் கண்ணம்மா. அதான் எல்லாம் சொல்லிட்டேனே என்று பாரதி சொல்ல, அவங்க அம்மா வந்து கேட்ட என்ன சொல்றது என்று கேட்கிறாள் கண்ணம்மா. அவள படிக்க வைக்கிற டாக்டர் வீட்டில் இருக்குறத சொல்லு என சொல்கிறான் பாரதி. லட்சுமி மேல என்ன திடீர் பாசம் என கண்ணம்மா கேட்க, அவ என்ன உன்னோட பொண்ணா? உனக்கு ஏன் அவ மேல இவ்வளவு பாசம் என்று கேட்கிறான் பாரதி. இல்லை அவங்க அப்பா கேட்ட என்ன சொல்றது என கண்ணம்மா கேட்க, அவங்க அம்மா அப்பா நம்பர் கொடு நான் பேசிக்கிறேன் என்கிறான் பாரதி. அதெல்லாம் முடியாது என கண்ணம்மா சொல்ல, அப்ப லட்சுமியோட அப்பா அம்மா வர்ற வரைக்கும் அனுப்ப முடியாது என சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி. எதுவும் சொல்ல முடியாமல் கண்ணம்மா தவிக்க, லட்சுமி உன்னோட மகள்னு சொல்லு கொண்டு வந்து விடுறேன் என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்புகிறான் பாரதி.
அடுத்து, பாரதி, லட்சுமிக்கிட்ட கோபப்பட்டதை பற்றி வருத்தமாக வேணுவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் லட்சுமி, என் குடும்பத்துல நானும் எங்க அம்மாவும் மட்டும் தான் இருக்கோம் என சொல்ல, வருத்தப்படும் சௌந்தர்யா நாங்க இருக்கோம் என சொல்கிறாள். அப்போது அங்கு வரும் கண்ணம்மாவின் அப்பா லட்சுமிக்கு சாக்லெட் கொடுக்க, வேணாம், எங்க அம்மா தெரியாதவங்க எது கொடுத்தாலும் சாப்பிடக் கூடாதுனு சொல்லிருக்காங்க என்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் கண்ணம்மாவின் அப்பா, நான் உன்னோட தாத்தா என்கிறார். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.