Advertisment

Vijay TV Serial; கொரோனாவால் கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி… சந்தேகப்படும் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode barathi stays kannamma house: கொரோனாவால் கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி, கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கியிருப்பதாக சந்தேகப்படும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
Aug 07, 2021 18:07 IST
Vijay TV Serial; கொரோனாவால் கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி… சந்தேகப்படும் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கொரோனா ரிசல்ட் வரும் வரை யாரும் வெளியே போகக்கூடாது என சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தி விட்டு செல்கின்றனர். பின்னர் பாரதியை பார்த்து வீட்டிலே இருக்கனும் என குழந்தைகளிடம் சொல்கிறாள் கண்ணம்மா. குழந்தைகள் விளையாட போனபின்னர், ஒருவரையொருவர் காதலுடன் பார்த்துக் கொள்கின்றனர் பாரதியும் கண்ணம்மாவும்.

publive-image

கண்ணம்மா வீட்டில் கஷ்டப்பட்டு வெற்றிகரமாக ஏசி மாட்டியதை நினைத்து, பெருமையாக வேணுவிடம் சொல்கிறாள் சௌந்தர்யா. ஹேமா வீட்டு வர்ற ஐடியாவுல இருக்காளா என வேணு கேட்க, வலுக்கட்டாய இழுந்து வந்தா தான் உண்டு, அந்த அளவுக்கு அவ அம்மாவோட சந்தோஷமா இருக்கா, ஹேமா அங்க இருக்கதால பாரதியும் அடிக்கடி கண்ணம்மா வீட்டுக்கு போறான், அவங்க ரெண்டு பேரும் அடிக்கடி பார்த்துக்கிறாங்க, இது நல்ல விஷயம் என சொல்கிறாள் சௌந்தர்யா. பின்னர் சௌந்தர்யா பாரதி எங்க இவ்வளவு நேரமாகியும் வரலையே என யோசிக்க, வந்துக்கிட்டு இருப்பான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு என வேணு சொல்கிறார்.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மா வீட்டில், பாரதி மீது சேறு அடிச்சவன நா உண்டு இல்லனு பண்ணப் போறேன் என லட்சுமி சொல்ல, அவனால தான் அப்பா இப்ப நம்மகூட இங்க இருக்கார் என ஹேமா சொல்கிறாள். அடுத்து ஹேமா பசிக்குது என எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ண சொல்கிறாள். பாரதி நா கிளம்பிடுறேன் என சொல்ல, கொரோனா இருக்கு, வெளில போக முடியாது, எங்க கூட தங்குங்க என கெஞ்சுகிறாள் ஹேமா. பாரதி அமைதியாக இருக்க, டாக்டர் அங்கிள் ஒகே சொல்லிட்டார் என சொல்கிறாள் லட்சுமி. பின்னர் கண்ணம்மா எல்லாருக்கும் தோசை எடுத்து வருகிறாள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். பாரதிக்கு சட்னி பிடிக்காது என பொடி எடுத்து வந்து தருகிறாள் கண்ணம்மா. பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் மீண்டும் ரொமான்ஸ் ஆரம்பமாகிறது. இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கிறார்கள். குழந்தைகள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, பாரதியும் கண்ணம்மாவும் கண்களிலே பேசிக் கொள்கின்றனர்.

publive-image

அடுத்து, பாரதிக்கு வெண்பா போன் செய்ய கட் பண்ணுகிறான் பாரதி. திரும்ப திரும்ப போன் செய்ய, வேறு வழியில்லாமல் எடுக்கும் பாரதியிடம், வெண்பா எங்க இருக்க என கேட்க, கொஞ்சம் வெளியில் வந்ததாக சமாளிக்கிறான். அடுத்து வெண்பா, அன்னைக்கு சண்டை போட்டதுக்கு சமாதானம் செய்ய, அதெல்லாம் பரவாயில்லை நாம எப்பவும் ப்ரண்ட்ஸ் தான் என்கிறான் பாரதி. பின்னர், வெண்பா, பாரதியை வெளியில் சாப்பிட அழைக்க, தடுமாறும் பாரதி சாப்பிட்டேன் என சமாளிக்கிறான். இதைக்கேட்டு சந்தேகப்படும் வெண்பா, என்ன அதுக்குள்ள சாப்பிட்ட என கேட்க, ஒரு ப்ரண்ட் வீட்டில் இருப்பதாகவும் நாளைக்கு வெளியில் போய் சாப்பிடலாம் என்று சொல்கிறான் பாரதி. ஆனால் விடாத வெண்பா, உன்ன இப்பவே பார்க்கனும் போல இருக்கு, நீ எங்க இருக்கனு சொல்லு நான் வர்றேன் என கேட்க, நாளைக்கு பார்க்கலாம்னு சொல்றேன்ல ஏன் அடம்புடிக்கிற என கோபமாக பேசுகிறான். அடுத்து, வெண்பா பிரண்ட் பேர் என்ன என கேட்க, அதெல்லாம் சொல்ல முடியாது போன வை கத்திவிட்டு போனை வைக்கிறான் பாரதி. கண்ணம்மா வீட்டில் இருப்பானோ என சந்தேகப்படும் வெண்பா பாரதிக்கு போன் செய்ய போன் ஸ்விட்சு ஆப் ஆக வருகிறது. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Barathi Kannamma Serial #Today Episode #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment