New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathikannamma-aug-21-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode barathi taunts kannamma: லட்சுமியை கூட்டி செல்ல வரும் கண்ணம்மாவிடம், அனுப்ப முடியாது என வெளியே போகச் சொல்லும் பாரதி, அஞ்சலிக்கு தவறான மருந்துகளை தர திட்டமிடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
பாரதி வீட்டுக்கு வரும் கண்ணம்மா, லட்சுமியை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை, அவள என்கூட அனுப்புங்க என சௌந்தர்யாவிடம் கேட்கிறாள். பின்னர் லட்சுமியை நினைத்து கவலைப்படும் கண்ணம்மாவிடம், பாரதி ஏன் இப்படி பண்றானு தெரியலை என்கிறாள் சௌந்தர்யா. அவருக்கு லட்சுமியை பத்தின உண்மை தெரிஞ்சிருக்கு என கண்ணம்மா சொல்ல, எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கு, ஆனால் நாம எதுவும் செய்யக்கூடாது, பாரதியும் லட்சுமியை நல்லா பார்த்துக்கிறான் என சௌந்தர்யா சொல்கிறாள். உடனே கண்ணம்மா, அதுக்காக லட்சுமியை விட்டுட்டு இருக்க முடியாது, அவரு லட்சுமியோட அம்மா அப்பா வரணும்னு சொல்றாரு, அதுக்கு நான் எங்க போவேன் என்று கேட்கிறாள். அப்போது சௌந்தர்யா, பாரதி வீட்டில் இல்ல, நீ லட்சுமியை கூட்டிட்டு போயிடு என்று சொல்ல, அதிரடியாய் எண்ட்ரியாகிறான் பாரதி.
பாரதியை பார்த்ததும், இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, நக்கலாக பேசுகிறான் பாரதி. பின்னர் நக்கலாக, வந்த வேலை முடிஞ்ச கிளம்ப வேண்டியது தானே, என கண்ணம்மாவை வெளியே போகச் சொல்கிறான். கண்ணம்மா வெளியே கிளம்ப, லட்சுமிய பார்த்துட்டு போ என தடுக்கிறான் பாரதி. கண்ணம்மாவை பார்த்ததும் சந்தோஷமாகிறாள் லட்சுமி. லட்சுமியை கொஞ்சும் கண்ணம்மாவிடம், டாக்டர் அங்கிள் என்னை நல்லா பாத்துக்குறாரு என்று சொல்கிறாள். பின்னர், லட்சுமி எனக்கு உடம்பு சரியாகிடுச்சு, என்னை கூட்டிட்டு போறீங்களா என கேட்க, போகலாம் என கண்ணம்மா அழைத்துச் செல்ல, பாரதி தடுக்கிறான். நீ உங்க அம்மா அப்பா வர்ற வரைக்கும் என் கூட தான் இருக்கனும், சமையல் அம்மாவுக்கு பை சொல்லு என லட்சுமியிடம் சொல்கிறான். கண்ணம்மா சோகத்துடன் வெளியே செல்கிறாள்.
அடுத்து, சாப்பிடக் கூப்பிடும் லட்சுமியிடம், கண்ணம்மா மேல் உள்ள கோபத்தை காட்டுகிறான் பாரதி. அப்போது பாரதிக்கு போன் செய்கிறாள் ஹேமா. பாரதி எப்படி இருக்க, என ஹேமாவிடம் கேட்க, நான் ரொம்ப கவலையா இருக்கேன் என சொல்கிறாள். இதைக்கேட்டு பதற்றப்படும் பாரதி, சமையல் அம்மா ஏதாவது திட்டுனாங்களா என கேட்க, அதெல்லாம் இல்லை, உங்கள பார்க்கணும் போல இருக்கு என்று சொல்கிறாள். இதைக்கேட்டு, சந்தோஷப்படும் பாரதி உடனே உன்ன பார்க்க வருகிறேன் என்று சொல்கிறான்.
அடுத்து, ஹாஸ்பிட்டலில் பாரதியின் அறைக்கு வரும் வெண்பா, பாரதியின் பிரிஸ்கிரிப்சன் நோட்டை எடுத்து, அஞ்சலிக்கு தவறான மருந்துகளை எழுதி தர திட்டமிடுகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.