scorecardresearch

Vijay TV Serial; ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி… இரண்டு பேரும் சேரப்போறாங்களோ?

Vijay TV barathikannamma serial today episode hema barathi visits kannamma: கண்ணம்மா வீட்டிற்கு வரும் ஹேமாவும் பாரதியும், கண்ணம்மாவிற்கு நன்றி சொல்லும் பாரதி இன்றைய எபிஷோடில்…

Vijay TV Serial; ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி… இரண்டு பேரும் சேரப்போறாங்களோ?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

சுமதிக்கு போன் செய்யும் சௌந்தர்யா, கண்ணம்மா வீட்டிற்கு பாரதியும் ஹேமாவும் வருவதாகவும், லட்சுமி கண்ணம்மாவோட மகள் என பாரதிக்கு தெரியக்கூடாது அதனால் லட்சுமியை வெளியில் கூட்டிட்டு போயிடு என சொல்கிறாள். சுமதியும் சரி என கண்ணம்மா வீட்டுக்கு வந்து, லட்சுமியை வெளியில் கூட்டி போகிறாள்.

அடுத்ததாக, கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார்கள் ஹேமாவும் பாரதியும். பாரதி உள்ளே வர மறுக்க, ஹேமா விடாப்பிடியாக, கண்ணம்மா வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். ஹேமாவையும் பாரதியையும் பார்க்கும் கண்ணம்மா, திகைத்து நிற்கிறாள். ஹேமா, நாங்க உங்கள பார்க்கத்தான் வந்ததாக கூற, உள்ளே அழைக்கிறாள் கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் கண்ணம்மா ஹேமாவிடம் எப்படி இருக்க என கேட்க, நல்லா இருக்கேன் என கூறும் ஹேமா, ரவுடிகளிடமிருந்து கண்ணம்மா தன்னை எப்படி காப்பாற்றினால் என பாரதியிடம் கூறுகிறாள்.

அடுத்து வியர்வையால் அவதிப்படும் பாரதிக்காக ஃபேனை எடுத்து வந்து வைக்கிறாள் கண்ணம்மா. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என பாரதியிடம் ஹேமா கேட்க, ஒன்னும் இல்லை என சமாளிக்கிறான் பாரதி. பின்னர் ஹேமா கண்ணம்மாவிடம் கேசரி செய்து தர சொல்லி கேட்க, செய்து கொடுக்கிறாள் கண்ணம்மா. கேசரியை பாரதிக்கும் கொடுக்க சொல்ல, பாரதி மறுக்கிறான். ஆனால் ஹேமா பிடிவாதமாக பாரதிக்கு கொடுக்கிறாள். அப்போது கண்ணம்மாவும் பாரதியும், தங்கள் பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கின்றனர்.

அப்பாவுக்கும் எனக்கும் முந்திரி போட்ட கேசரி ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு எப்படி இது தெரியும் என ஹேமா கேட்க, நா எப்பவும் இப்படிதான் செய்வேன் என சமாளிக்கிறாள் கண்ணம்மா. பின்னர் நாய்குட்டியுடன் விளையாடி விட்டு வருவதாக, பாரதியையும் கண்ணம்மாவையும் தனியாக விட்டு செல்கிறாள் ஹேமா. பாரதியை கேசரி சாப்பிட சொல்கிறாள் கண்ணம்மா. ஹேமாவை காப்பாற்றியதற்காக கண்ணம்மாவுக்கு நன்றி சொல்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv barathikannamma serial today episode hema barathi visits kannamma