Advertisment

Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் ஹேமா… பாரதியா இது?

Vijay TV barathikannamma serial today episode hema kannamma bonding: பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்துடுவாங்களோ என்ற டென்ஷனில் வெண்பா, கண்ணம்மா வீட்டில் ஹேமாவை விடும் பாரதி், இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மா வீட்டில் ஹேமா… பாரதியா இது?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

பாரதியும் கண்ணம்மாவும் ஒரே காரில் ஒன்றாக வந்ததை நினைத்து எரிச்சலோடு இருக்கிறாள் வெண்பா. ஹேமாவுக்கு அந்த சமையல் அம்மா தான் வேணுமாம், அதனால குடும்பம் மொத்தமும் பாரதியை வற்புறுத்தி கண்ணம்மாவை கூட்டி வர வச்சுட்டாங்க என சாந்தியிடம் கோபமாக சொல்கிறாள் வெண்பா. பாரதி ஏன் இப்ப இப்படி பண்றார் என சாந்தி கேட்க, எல்லாம் அந்த ஹேமாவுக்காக என சொல்கிறாள் வெண்பா. வேற வழியில்லாம தான் பாரதி இப்படி செஞ்சிருப்பாரு என சாந்தி சொல்ல, ஹேமாவுக்காக பாரதி என்ன வேணாலும் பண்ணுவானா? என்கிறாள். பின்னர் பாரதி ஹேமாவ அமெரிக்கா கூட்டிட்டு போயிருவான், நானும் அங்க போய், ஹேமா சமாளிச்சு பாரதி கூட சேர்ந்து வாழலாம்னு நினைச்சேன், ஆனா இப்ப எல்லாம் சொதப்பிருச்சு என்று டென்ஷனாகிறாள் வெண்பா. பரவாயில்லை விடுங்க, கூடிய சீக்கிரம் பாரதி உங்க கழுத்துல தாலி கட்டுவாரு என சமாதானம் செய்கிறாள் சாந்தி.

publive-image

அடுத்து, வேணுவை கோயிலுக்கு அழைக்கிறாள் சௌந்தர்யா. அப்போது, ஹேமாவை தூக்கிக் கொண்டு, கையில் சூட்கேஸோடு வருகிறான் பாரதி. எல்லோரும் பதறி என்னவென்று கேட்க, ஹேமாவை சமையல் அம்மா வீட்டில் விட்டுட்டு வரப்போறேன் என சொல்கிறான். இதைக்கேட்டு எல்லோரும் சந்தோஷமாகிறார்கள். ஹேமா விஷயத்தில் நிறைய தப்பு பண்ணிட்டேன், அதனால் ஹேமா சந்தோஷமா இருக்க சமையல் அம்மாகிட்ட விடப்போறேன் என்கிறான். அப்போது, வேணு எல்லோரும் சேர்ந்து போய் கண்ணம்மா வீட்டில் ஹேமாவை விட்டுட்டு வருவோம் என்று சொல்ல, டென்ஷனாகிறான் பாரதி. பின்னர்,சமையல் அம்மா வீட்டில் என வேணு சமாளிக்க, நானே கொண்டுபோய் விட்டு வர்றேன் என சொல்லி, ஹேமாவை அழைத்துச் செல்கிறான்.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மா வீட்டு முன் ஹேமாவிடம், உனக்கு சமையல் அம்மா ரொம்ப பிடிக்கும்ல அதனால் நீ ஆசைப்படுற வரைக்கும் இங்க இருக்கலாம் என சொல்ல, சந்தோஷமாகிறாள் ஹேமா. பின்னர் சமையல் அம்மாவை போய் கட்டிபிடித்துக் கொள்கிறாள் ஹேமா. டாடி என்ன உங்க கூட கொஞ்ச நாள் தங்குறதுக்கு கொண்டு வந்து விட்டுருக்கார் என கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா, அதற்காக பாரதிக்கு நன்றியும் சொல்கிறாள். ஹேமா என்னென்ன சாப்பிடுவா என பாரதி சொல்ல, அதெல்லாம் எனக்கு தெரியும் என கண்ணம்மா சொல்கிறாள். ஹேமாவும் எனக்கு எது வேணும்னா கேட்டுக்கிறேன் என சொல்லி, கண்ணம்மா கையை இறுக்கி பிடிக்கிறாள். இதைப்பார்த்து வருத்தமாகிறான் பாரதி.

publive-image

அடுத்து, பாரதி தயக்கத்துடன் 10000 ரூபாய் பணத்தை கண்ணம்மாவிடம் கொடுக்கிறான். அதற்கு கண்ணம்மா, நா அன்பை பணத்துக்கு விக்கிறதில்ல என கோபமாக சொல்கிறாள். ஹேமாவ இன்னொரு பொண்ணா நினைச்சு என்னால் நல்ல பார்த்துக்க முடியும் என பாரதியை கிளம்பச் சொல்கிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment