விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்துவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் பாக்கியாவும் சண்முகமும். அப்போது கண்ணம்மாவுக்கு என்றால் உடனே செய்வீங்க என சொல்ல, அஞ்சலியும் என் பொண்ணு தான், கண்ணம்மா அம்மா இல்லாத பொண்ணுங்கிறதால கொஞ்சம் கூடுதல் பாசம் என்கிறார் சண்முகம். அஞ்சலிக்கு வளைகாப்பு பெரிசா செய்ய பணமில்லை என்று சொல்லும் சண்முகத்திடம், என்கிட்ட பணம் இருக்கு என ஆச்சரியப்படுத்துகிறாள் பாக்கியா. பின்னர் சண்முகம் தயங்கியபடியே, அஞ்சலி வளைகாப்புக்கு கண்ணம்மாவ கட்டாயம் கூப்பிடணும் என்று சொல்ல, கோபமாகும் பாக்கியா அதெல்லாம் சரியா வராது என்கிறாள். ஆனால் சண்முகம், கண்ணம்மாவ கண்டிப்பா கூப்பிடணும், என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம் என்கிறார்.
அடுத்து அஞ்சலி, குழந்தையை நினைத்து கவலைப்படுகிறாள். அப்போது வலி அதிகமாக, வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிடுகிறாள். மூச்சு திணறல் ஏற்படவே, வெண்பாவுக்கு போன் செய்கிறாள். மூச்சு விட கஷ்டப்படுவதாக அஞ்சலி சொல்வதை கேட்கும் வெண்பா சந்தோஷமாகிறாள். பின்னர் மாத்திரையால இருக்காது, உனக்கு உடம்புல இருக்குற பிரச்சனையால மூச்சு விடுவது கஷ்டமாக இருக்கலாம் என சமாளிக்கிறாள். மேலும் நீ கஷ்டப்படுறத பார்க்கும்போது கவலையாக இருப்பதாக பொய்யாக கூறும் வெண்பா, மூச்சு திணறலை குறைக்க வழி சொல்கிறாள்.
அடுத்து சௌந்தர்யா வீட்டுக்கு வரும் அஞ்சலியின் பெற்றோர், அஞ்சலியை பற்றி கேட்க, அகிலும் அஞ்சலியும் கோவிலுக்கு போயிருப்பதாக சொல்கிறாள் சௌந்தர்யா. பின்னர் தயங்கியபடியே இருவரும், அஞ்சலிக்கு வளைகாப்பு நடத்துவதைப் பற்றி பேசுகிறார்கள். வளைகாப்பு எங்கள் வீட்டில் நடத்தணும் எனும் சொல்லும் பாக்கியாவிடம், மாமனார் வீட்டில் தான் வளைகாப்பு நடத்தணும் என்கிறாள் சௌந்தர்யா. அதற்கு பாக்கியா எங்க வீட்டில் எந்த விஷேசமும் நடந்ததில்லை, அதனால் இத எங்க வீட்டில் நடத்த ஆசைப்படுறோம் என்கிறாள். செலவுக்கு என்ன பண்ணுவிங்க என சௌந்தர்யா கேட்க, கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கோம் அதுல பண்ணிரலாம் என்று சொல்கிறாள் பாக்கியா. சௌந்தர்யா அரை மனதுடன் சம்மதிக்கிறாள். பின்னர் இருவரும் கிளம்பிய பின்னர், அஞ்சலியின் அம்மா நிறைய மாறிவிட்டதாக சொல்கிறாள் சௌந்தர்யா. அடுத்து, பாரதியின் மாற்றத்தை நினைத்து கவலைப் படுகிறாள் லட்சுமி.
ஆட்டோ டிரைவர் குமாரும் கண்ணம்மாவும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கின்றனர். அப்போது ஹேமா ஷார்ப்பினர் கேட்க, குமாரை ஹேமாவுக்கு தேவையானதையெல்லாம் வாங்கி தர சொல்கிறாள். இருவரும் கிளம்பிய பின்னர், கண்ணம்மாவுக்கு கடுமையான தலைவலி ஏற்படுகிறது. இதனால், டாக்டரை பார்க்க முடிவெடுக்கிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil