Vijay TV Serial; ஹேமாவுக்கு கண்ணம்மா தான் உயிர்… பாரதியின் முடிவு என்ன?

Vijay TV barathikannamma serial today episode kannamma pleads with barathi: ஹேமாவுக்காக கண்ணம்மாவை கூட்டி வரும் பாரதி, கண்ணம்மா கூப்பிட்டததும் கண்விழிக்கும் ஹேமா இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மா வீட்டிற்கு வருகிறான் பாரதி. தயக்கத்துடன் வாசலில் நிற்பவனை உள்ளே வரச் சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர், பாரதி அமெரிக்கா கிளம்புவதற்கு முன் கண்ணம்மாவிடம் பேசியதை குத்திக்காட்டுகிறாள். ஹேமாவுக்கு உடம்பு சரியில்லை, என்கூட ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா எனக் கேட்கிறான் பாரதி. ஹேமாவை நினைத்து கவலைப்படும் கண்ணம்மா, ஹேமா நிலைமைக்கு நீங்கதான் காரணம் என குற்றம் சுமத்துகிறாள். அதற்கு ஹேமாவுக்கு இப்ப சமையல் அம்மா வேணும் கூட வா என அழைக்கிறான். ஹேமாவுக்காக வருவதாக சொல்கிறாள் கண்ணம்மா.

பின்னர் பாரதியுடன் காரில் ஹாஸ்பிட்டலுக்கு ஒன்றாக செல்கிறாள் கண்ணம்மா. காரை வேகமாக ஓட்டும் பாரதியை மெதுவாக போக சொல்கிறாள் கண்ணம்மா. வழியில் போலீஸ் நிறுத்த, போலீஸூடன் சண்டை போடுகிறான் பாரதி. அப்போது கண்ணம்மா வந்து போலீஸிடம் பேசி சமாதானம் செய்கிறாள்.

அடுத்ததாக, கண்ணம்மாவை பாரதி கூட்டிட்டு வந்துருவானா என சந்தேகத்துடன் காத்திருக்கிறார்கள் சௌந்தர்யாவும் வேணுவும். பின்னர் வெண்பாவிடம், பாரதியை ஏன் ஏத்திவிடுற என திட்டுகிறாள். அதற்கு வெண்பா அவன் பக்க நியாத்தைதான் பேசுறேன் என சொல்ல, எங்க குடும்ப விஷயத்தில் நீ ஒதுங்கியே இரு என சொல்கிறாள். அப்போது அங்கு கண்ணம்மா வர அதிர்ச்சியாகிறாள் வெண்பா. பின்னர் கண்ணம்மா ஹேமாவிடம் சென்று, எழுப்புகிறாள். இங்கு வெண்பா பாரதியிடம் கண்ணம்மாவை ஏன் கூட்டி வந்த என கேட்க, இப்ப எதுவும் கேட்காதா என சொல்கிறான் பாரதி. உள்ளே கண்ணம்மாவும் டாக்டரும் ஹேமாவை எழுப்ப முயற்சிக்க, மெதுவாக கண் விழிக்கிறாள் ஹேமா. எல்லோரும் ஆச்சரியப்பட, கண்ணம்மாவை பார்த்து சிரிக்கிறாள் ஹேமா. பின்னர் சமையல் அம்மா என கண்ணம்மாவை சந்தோஷமாக அழைக்கிறாள். இதைக்கேட்டு என்ன செய்வதென தெரியாமல் நிற்கிறான் பாரதி.    இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial today episode kannamma pleads with barathi

Next Story
Vijay TV Serial : கண்ணன் – ஐஸ்வர்யாவுக்கு குடும்பத்தினர் அட்வைஸ் : அடுத்து என்ன நடக்கும்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com