Vijay TV Serial; லட்சுமி என் பொண்ணு, உண்மையை உடைத்த கண்ணம்மா… என்ன செய்ய போகிறான் பாரதி?

Vijay TV barathikannamma serial today episode kannamma tells truth: லட்சுமி பற்றிய உண்மையை உடைத்த கண்ணம்மா, என்னை ஏமாத்திட்டிங்க என சௌந்தர்யாவிடம் கோபப்படும் பாரதி, இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

உன் பொண்ணு படிக்க வைக்கிறேன் என சொல்லும் பாரதியிடம், என் பொண்ண படிக்க வைக்க எனக்கு தெரியும் என காட்டமாக சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர் நீ எதுக்காக இங்க வந்த என பாரதி கேட்க, யோசிக்கும் கண்ணம்மா லட்சுமியை என்கூட அனுப்புங்க என்கிறாள். பாரதி ஏற்கனவே சொல்லிட்டேன்ல அனுப்ப முடியாது என உறுதியாக செல்கிறான். கண்ணம்மா கோபமாக கடைசியாக கேட்க, எத்தன தடவை கேட்டாலும் கண்டிப்பா அனுப்ப முடியாது என்கிறான் பாரதி. லட்சுமியோட அப்பா அம்மா வந்தா மட்டும்தான் அனுப்புவேன், ஹேமாவ பார்த்துக்கிட்டதுக்கு நன்றி என சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி.

அப்போது சொடக்கு போட்டு பாரதியை கூப்பிடும் கண்ணம்மா, லட்சுமியை என்கூட அனுப்பி வை என கோபமாக சொல்ல, அவங்க அப்பா அம்மா வந்தாதான் அனுப்புவேன் என கோபமாகிறான் பாரதி. உடனே கண்ணம்மா, நான் தான் லட்சுமியோட அம்மா என கத்தி சொல்கிறாள். இதைக்கேட்டு நக்கலாக சிரிக்கிறான் பாரதி. கண்ணம்மா மேலும், லட்சுமி நான் பெத்த பொண்ணு, அவள அனுப்பி வை உத்தரவிடும் வகையில் சொல்கிறாள். அதற்கு பாரதி, அப்ப இவ்வளவு நாளும் பொய் சொல்லிக்கிட்டு இருந்தியா என கேட்க, ஆமா சொன்னேன் அதுக்கு என்ன இப்ப என கூலாக கேட்கிறாள் கண்ணம்மா. அப்போது பாரதி, பொய் சொல்றது உனக்கு கை வந்த கலை, ஆனா எங்க வீட்டுல எல்லாரையும் மாத்தி வச்சுருக்க பாரு, அதான் ஏத்துக்க முடியல என்று சொல்கிறான். இதை மறைத்திருந்து பார்க்கும் சௌந்தர்யாவும் வேணும் அதிர்ச்சியாகிறார்கள்.

அடுத்து, சமையல் அம்மாங்கிற வார்த்தையே உனக்காகத் தான் உருவாக்கி இருக்கனும். முதல்ல ஹேமாவ என்கிட்ட இருந்து பிரிச்ச, இப்ப லட்சுமிய என்கூட சேர்க்க பார்க்குற அதெல்லாம் ஏன் என பாரதி கேட்க, எதுவும் சொல்ல முடியாது லட்சுமிய அனுப்பு என்கிறாள் கண்ணம்மா. ஆனால் பாரதி, பெத்த பொண்ண வேற ஒருத்தவங்களோட பொண்ணு என சொன்னியே உனக்கு வெட்கமா இல்ல, அந்த பொய்க்கு ஏத்த மாதிரி உன் மகளையும் மாத்தி வச்சுருக்க, உனக்கு கூச்சமா இல்லையா என கேட்கிறான். அதற்கு கண்ணம்மா அசால்ட்டாக, என்னமோ நோபல் பரிசு ஆராய்ச்சியை கண்டுபிடிச்ச மாதிரி பேசுற, நீ ஒழுங்கானவனா இருந்த நான் ஏன் மறைக்கப் போறேன் என்கிறாள் கண்ணம்மா.

அதுக்கு பாரதி, உன் பொண்ண படிக்க வைக்க தான் நாடகம் ஆடுனியா என கேட்க, உன்ன நம்பி நான் இல்லை, என்ன பொண்ண எனக்கு படிக்க வைக்க தெரியும், உனக்கு உண்மை தெரிஞ்ச என் பொண்ண அசிங்கப்படுத்துவ என்று தான் சொல்லலை என்கிறாள் கண்ணம்மா. இதைக்கேட்டு சிரிக்கும் பாரதி, சின்ன குழந்தைக்கிட்ட கோபத்த காட்ட மாட்டேன், ஆனா நீ பொய்யா சொல்லிக்கிட்டு இருக்க, எங்க வீட்டில் எல்லாரும் உன்னை நம்புறாங்க என சொல்லி கவலைப்படுகிறான். அப்போது அங்கு வரும் லட்சுமி, சமையல் அம்மானு கூப்பிட, இனி என்னை அம்மானு தான் கூப்பிடணும் என்று சொல்லி, லட்சுமியை அழைத்துச் செல்கிறாள்.

அடுத்து, பாரதி எதுவும் பேசாததை நினைத்து கவலைப்படுகிறார்கள் வேணும் சௌந்தர்யாவும். அப்போது அங்கு வரும் பாரதி, நீங்க தான் நிறைய பொய் சொல்வீங்களே இப்ப ஏதாவது சொல்லுங்க என சௌந்தர்யாவிடம் கேட்கிறான். எல்லாரும் சேர்ந்து நல்லா நடிக்கிறீங்க என வருத்தப்படும் பாரதி, உங்க எல்லாரையும் விட லட்சுமிதான் நல்லா நடிச்சா என அழுகிறான். எல்லாத்துக்கும் காரணம் கண்ணம்மாதான் என குற்றம் சுமத்தும் பாரதியிடம் சௌந்தர்யா எதோ சொல்ல வர, கோபமாகும் பாரதி நான் என்ன ஜோக்கரா, ஒருத்தி என்ன ஏமாத்திட்டு இன்னொருத்தனுக்கு புள்ளைய பெத்துட்டு போவா, அந்த புள்ளைக்கு அப்பனாக என்ன சொல்லுவா, அந்த புள்ளைய நீங்க கொண்டு வந்து கொஞ்சுவீங்க என சொல்கிறான். இதெல்லாம் கண்ணம்மா கூட சேர்ந்திருவேன்ணு நினைச்சு பண்றிங்களா, அது நடக்காது என்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial today episode kannamma tells truth

Next Story
சிரிக்காமல் இருந்து பரிசு வாங்கிய புகழ் : அதுவும் இத்தனை லட்சமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com