விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கோவிலில் கண்ணம்மாவை சந்திக்கும் சௌந்தர்யா என்ன விஷயம் என கேட்க, பாரதியை பற்றி கேட்கிறாள். ஆச்சரியப்படும் சௌந்தர்யா, ஏன் பாரதியை பற்றி கேட்குற என கேட்க, பாரதிக்கிட்ட நான் தனியா பேசுனேன் என்கிறாள். பின்னர், என்னோட இன்னொரு குழந்தை பத்தி கேட்கதான் கூப்பிட்டேன், அப்போது, அவர் தான் எனக்கு பிரசவம் பார்த்தாத சொன்னாரு, உனக்கு ஒரு குழந்தை தான் என்று சொல்றாரு, ஆனா எனக்கு இன்னும் குழப்பமா இருக்கு என்கிறாள். என்னோட இன்னொரு குழந்தைய யாரோ திருடிட்டாங்கனு நினைக்கிறேன் என்கிறாள். மேலும் அவர் எனக்கு பிரசவம் பார்த்ததுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன் என்கிறாள். இதைக்கேட்டு சந்தோஷப்படும் சௌந்தர்யா, பாரதியை நினைத்து ஆச்சரியப்படுகிறாள். பின்னர் கண்ணம்மா இன்னொரு குழந்தையை பற்றி பேசும் கண்ணம்மா, கண்டுப்பிடிக்காம விட மாட்டேன் என சொல்லிவிட்டு செல்கிறாள்.
அடுத்ததாக, கண்ணம்மாவுக்கு நீதான் பிரசவம் பார்த்தியா என சௌந்தர்யா கேட்க, அதிர்ச்சியாகும் பாரதி, ஆமாம், அதுக்குள்ள உங்ககிட்ட சொல்லிட்டாளா என்கிறான். பின்னர் கண்ணம்மா ரொம்ப நன்றியோட பேசுனா என சொல்ல, நக்கலாக சிரிக்கிறான் பாரதி. அப்போது அகில் நீ அப்ப கண்ணம்மா மேல கோபமா இருந்தியே நீ எப்படி என கேட்க, அதான் பாரதி என பெருமையாக சொல்கிறான். பின்னர் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்தப்போது நடந்ததை சொல்லும் பாரதி, கண்ணம்மா மேல உள்ள கோபத்தை கட்டுபடுத்தி பிரசவம் பார்த்ததையும் சொல்கிறான். மேலும் கண்ணம்மாவோட குழந்தையை முதலில் தூக்கியது நான் தான் என்கிறான். என்னோட முதல் பிரசவமும் அதான் என பாரதி சொல்ல, பாரதியை கட்டிக்கொள்கிறாள் சௌந்தர்யா. வேணுவும் பாரதியை பெருமையாக பேசுகிறார். அஞ்சலியோ நீங்க ஹீரோ என புகழ, வெட்கத்தில் அங்கிருந்து கிளம்புகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil