/tamil-ie/media/media_files/uploads/2021/10/barathikannamma-oct-5-epi.jpg)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்தேனு சொன்னதுக்கு எல்லாரும் இவ்வளவு சந்தோஷப்படுறாங்களே, நான் மாறிட்டேனு நினைக்குறாங்களோ, நிச்சயமா நடக்காது, கண்ணம்மா மேல உள்ள கோபம் என்னைக்கும் குறையாது, இதுல கண்ணம்மா, வெண்பா டைவர்ஸ் பண்ண சொல்றானு அடிச்சு விடுறா, வெண்பா அப்படிபட்டவ இல்ல, கண்ணம்மா பொய் சொல்றா, இருந்தாலும் நான் ஏன் இன்னும் கண்ணம்மாவ டைவர்ஸ் பண்ணாம இருக்கேன், அடுத்த வேளை டைவர்ஸ் தான் என முடிவெடுக்கிறான் பாரதி.
அடுத்ததாக, பாரதி மாறி வருவதையும், கண்ணம்மா தன் குழந்தையை தேடுவதைப் பற்றியும் வேணுவும் சௌந்தர்யாவும் பேசிக் கொள்கிறார்கள். அப்போது சௌந்தர்யா, பாரதியும் கண்ணம்மாவும் ஒண்ணு சேர்ந்திருவாங்கனு தோணுது என சொல்ல, நிச்சயம் நடக்கும் ஆனா கொஞ்சம் டைம் ஆகும் என்கிறார் வேணு.
அடுத்ததாக, கண்ணம்மா வீட்டுக்கு டைவர்ஸ் பேப்பருடன் வருகிறாள் வெண்பா. கண்ணம்மாவிடம் உனக்கு குழந்தை வேணும்னா, இந்த டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடு என, டைவர்ஸ் பேப்பரை நீட்டுகிறாள் வெண்பா. தயக்கத்துடன் வாங்குகிறாள் கண்ணம்மா. ரொம்ப யோசிக்காத, உன்ன சந்தேகப்பட்டவனா தான் பிரியப் போற, நாளை வக்கீல் ஆபிஸ்க்கு வந்துரு என சொல்லிட்டு செல்கிறாள் வெண்பா.
அடுத்ததாக, கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கு, ஆனா இந்த விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரியாதுல்ல என நக்கலாக கேட்க, தெரியாது என்கிறாள் சௌந்தர்யா. அப்புறம் ஹேமாவ லட்சுமிக்கூட பழகவிட்டு, அவள என்கூட சேர்க்குறதுக்கு ப்ளான் பண்ணிங்க தானே என பாரதி கேட்க, அப்படியெல்லாம் இல்லை என சமாளிக்கிறார் வேணு. பின்னர் பாரதி கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயம் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், ஆனா சொல்லமாட்டீங்க என பாரதி சொல்ல, எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறாள் சௌந்தர்யா. உடனே பாரதி நீங்க நல்லா நாடகம் நடத்துங்க, ஆனா கூடிய சீக்கிரமே இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என்கிறான் பாரதி. என்ன பண்ண போற என சௌந்தர்யா கேட்க, நான் சொன்ன அத கெடுக்குறதுக்கு நீங்க ப்ளான் பண்ணுவீங்க, அதனால, நான் என்ன போறேனு கண்டுபிடிங்க என சொல்லிவிட்டு செல்கிறான் பாரதி.
அடுத்ததாக, டைவர்ஸ் பத்தி கண்ணம்மா தன் மனசாட்சியோடு பேசுகிறாள். அப்போது மனசாட்சி உனக்கு குழந்தை வேணுமா? டைவர்ஸ் வேணுமா என கேட்க, என் குழந்தை தான் முக்கியம் என்கிறாள். அப்ப உன் குழந்தை உனக்கு கிடைச்சிட்டா டைவர்ஸ் வேண்டாம் தானே என மனசாட்சி கேட்க, இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.