Vijay TV Serial; ஹேமாவுடன் நெருக்கமாகும் கண்ணம்மா… பொறாமைப்படும் லட்சுமி

Vijay TV Barathikannamma serial today episode lakshmi gets envious: பாரதியை வெறுப்பேற்றும் வெண்பா, ஹேமாவுடன் கண்ணம்மா நெருக்கமாவதால் பொறாமைப்படும் லட்சுமி இன்றைய எபிஷோடில்…

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விட்டிருக்கேன் என பாரதி சொல்ல, டென்ஷன் ஆகிறாள் வெண்பா. டாக்டர் பிரியா சொன்னதாலும், வீட்டில் உள்ளவங்க வற்புறுத்தியதாலும், வேறு வழியில்லாமல் கண்ணம்மா வீட்டில் விட்டு விட்டு வந்ததாக சொல்கிறான் பாரதி. அடுத்து தான் ஏசி அனுப்பியதையும் கண்ணம்மா திருப்பி அனுப்பி விட்டதாக சொல்கிறான் பாரதி. மேலும் செலவுக்கு பணம் கொடுத்ததையும் வாங்கிக்கலை என்றும் சொல்கிறான். இதைக்கேட்ட வெண்பா, கண்ணம்மா வீட்டு ரேசன் கார்டில் குடும்பத் தலைவனு உன் பேர சேர்த்திட வேண்டியது தானே என வெறுப்பேற்றுகிறாள். நீ ஹேமா மேல உயிரே வச்சிருக்க, ஆனா அவ கண்ணம்மா தான் முக்கியம்னு அவ வீட்டுக்கு போய்ட்ட என சொல்கிறாள் வெண்பா. மேலும் நாளைக்கு ஹேமா சொன்ன கண்ணம்மா கூட சேர்ந்து வாழப்போறியா என்றும் கேட்கிறாள். உடனே கோபத்தில் போதும் நிறுத்து என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி.

அடுத்து, ஹேமாவுக்கு தாயம் விளையாட சொல்லிக்கொடுக்கிறாள் லட்சுமி. அப்போது ஹேமா கண்ணம்மாவுடன் சேர, பொறமைப்படுகிறாள் லட்சுமி. ஹேமாவும் கண்ணம்மாவும் நெருக்கமாவதைப் பார்த்து கோபமாகிறாள். விளையாட்டை கலைத்துவிட்டு கோபமாக வெளியே செல்கிறாள்.

அடுத்ததாக, பாரதி எங்க போயிருப்பான் என பேசிக்கொண்டிருக்கிறாள் வேணுவும், சௌந்தர்யாவும். அப்போது ஹேமா ஏசி இல்லாமல் இருப்பாளா என வேணு கேட்க, அம்மா பாசத்துக்காக போனவளுக்கு அதெல்லாம் தேவைப்படாது என்கிறாள். அப்போது அங்கு கோபமாக வரும் பாரதி, ஹேமா இந்த வீட்டுக்கு திரும்ப வர்ற வரைக்கும் நம்ம வீட்டில் அஞ்சலியைத் தவிர யாரும் ஏசி போடக்கூடாது என கண்டிஷன் போடுகிறான். பாரதி சொன்னதைக்கேட்டு எல்லாரும் சிரிக்க, எல்லோரும் இப்படியே வாழ பழகிக்கோங்க என்று கோபமாக சொல்லிவிட்டு செல்கிறான்.

அடுத்து, எல்லோரும் இரவு மொட்டை மாடியில் படுக்கலாம் என கண்ணம்மா சொல்ல, ஜாலியாகிறார்கள் லட்சுமியும் ஹேமாவும். பின்னர் ஹேமா கண்ணம்மாவை சாப்பாடு ஊட்டிவிட சொல்ல, பொறாமைப்படுகிறாள் லட்சுமி. ஹேமாவுக்கு ஊட்டிவிடும்போது, லட்சுமி கோபப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. அப்போது, ஹேமா ஐஸ்வாட்டர் வேண்டுமென கேட்க, உங்க வீட்டில் போய் குடிச்சிக்கோ என கோபமாக சொல்கிறாள் லட்சுமி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv barathikannamma serial today episode lakshmi gets envious

Next Story
புதிய மைல்கல்லை எட்டிய பாக்கியலட்சுமி சீரியல் : கொண்டாட்டத்தில் சீரியல் டீம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com